திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் இரவு 8.25 மணிக்கு திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு திருநெல்வேலி, மதுரை, திருச்சி வழியாக சென்னை சென்றடையும்.
இந்த நிலையில் திருச்சி பகுதியில் நடைபெறும் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை செப்டம்பர் 22, 24, 26 மற்றும் அக்டோபர் 1 ஆம் தேதி ஆகிய 4 நாட்கள் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணி நேரம் 10 நிமிடங்கள் காலதாமதமாக செல்லும்.
அதாவது திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 8.25 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக இரவு 10.35 மணிக்கு புறப்படும் என்று தென்னக ரயில்வே அறிப்பை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக திருச்செந்தூர் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வெளி மாவட்டங்களான சென்னை, திருச்சி, மதுரை போன்ற பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் இந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலிலே பயணம் செய்வார்கள். தற்போது தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு சற்று சிரமத்தை கொடுத்துள்ளது.


