தூத்துக்குடியில் குறு சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்களுக்கு தொழில் கடன் மேளா 27ம் தேதி நடைபெறுகிறது.
இதுதொடர்பாக ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு தமிழ்நாடு அரசு நிதிக் கழகம் ஆகும். 1949ம் ஆண்டு துவங்கப் பெற்ற இக்கழகம் மாநிலஅரசின் ஆதரவுடன் இது வரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது.
இக்கழகம் குறு சிறுமற்றும் நடுத்தரதொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும் ,உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது. தூத்துக்குடி கிளை அலுவலகத்தில் (முகவரி:-4/35N.P.S. Complex, போல்பேட்டை புதிய பேருந்து நிலையம் அருகில் தூத்துக்குடி) குறு சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்களுக்கு தொழில் கடன் மேளா 18.08.2021 முதல் 27.08.2021வரை நடைபெறுகிறது.
இச்சிறப்பு தொழில் கடன் மேளாவில டி.ஐ.ஐ.சி.யின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம், 6 விழுக்காடு வட்டிமானியம் மற்றும் இதரமானியங்கள்) புதியதொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனமேம்பாட்டுத் திட்டம் (NEEDS) போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழகஅரசின் 25மூமுதலீட்டுமானியம் ரூ.50 இலட்சம் வரைவழங்கப்படும்.
இந்தமுகாம் காலத்தில் சமர்பிக்கப்படும்பொதுகடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வுகட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை அளிக்கப்படும். NEEDS திட்டத்திற்கு ஆய்வு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த அரிய வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர் /தொழில்திபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். என மாவட்ட ஆட்சியர் .கி.செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.


