தூத்துக்குடி மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் மீன்வள உதவியாளர் நிரந்தர காலிபணியிடங்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறையில் தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாகவுள்ள 2 மீன்வள உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு நடத்தப்படவுள்ளது. மீன்வள உதவியாளர் பதவிகளுக்கு தமிழில் நன்றாக எழுத படிக்க தெரிந்திருத்தல் வேண்டும்.
மேலும் நீச்சல், மீன்பிடிப்பு, வலைபின்னுதல், அறுந்த வலைகளை பழுது பார்க்க தெரிந்திருக்க வேண்டும் மற்றும் மீன்வளத் துறையினரால் நடத்தப்படும் ஏதேனும் ஒரு மீனவர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயதுவரம்பு: 01.07.2021 அன்றுள்ளபடி கணக்கிடப்படும்
சம்பளவிகிதம்: ரூ.15900-50400
1. பொதுப் போட்டி (முன்னுரிமை பெற்றவர்) – வயதுவரம்பு 18 முதல் 30 வரை -1 பணியிடம்
2. பிற்படுத்தப்பட்டோர் (பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்கள் தவிர முன்னுரிமை பெற்றவர்) – வயதுவரம்பு 18 முதல் 32 வரை – 1 பணியிடம்
மேற்கண்ட பணிடங்களுக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் “மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் (மண்டலம்), 166,வடக்கு கடற்கரை சாலை, திரேஸ்புரம், தூத்துக்குடி- 628001. தொலைபேசி எண்: 0461-2320673” என்ற முகவரியில் விண்ணப்பங்களை நேரில் பெற்று, உரிய நகல் ஆவணங்களுடன் 15.09.2021 அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நேர்முகத் தேர்விற்கான இடம் மற்றும் நாள் குறித்து விண்ணப்பதாரர்களுக்கு பின்னர் தெரிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.


