செய்துங்கநல்லூரில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் பரிசளிப்பு விழா நடந்தது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செய்துங்கநல்லூர் கிளை சார்பில் தவ்ஹீத் மதரஸா மாணவ மாணவிகளின் பேச்சுப்போட்டி மற்றும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி செய்துங்கநல்லூர் மதரஸா வளாகத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளிவாசல் இமாம் தலைமை வகித்தார். மீரான் முன்னிலை வகித்தார். 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்குபெற்று வெவ்வேறு தலைப்புகளில் சிறப்பாக உரையாற்றினர். தவ்ஹீத் ஜமாஅத் பேச்சாளர் கமால் சிறப்புரையாற்றினார். அனைத்து மாணவ மாணவிகளுக்கும் ஜமால் மற்றும் அலியார் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
கிளைத்தலைவர் சாதிக், செயலாளர் அப்துல் காதர், பொருளாளர் கரீம்பாஷா, துணை தலைவர் வாசிம், துணை செயலாளர் அப்துல் கனி ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாட்டை செய்திருந்தனர். இதில் ஜமாத்தினர் மற்றும் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்துல்காதர் நன்றியுரையாற்றினார்.