உலகத் தாய்மொழி தினவிழாவை முன்னிட்டு பாரதியார் உலகப்பொது சேவை நிதியம் செந்தமிழ் வளர்ச்செம்மல் விருது வழங்குகிறது. எனது எழுத்துலகில் முன்னேற்றம் ஏற்படக் காரண கர்த்தாவான ஆதித்தனார் கல்வி குழுமத்தின் செயலாளர் எங்கள் அய்யா பேராசிரியர் நெல்லை கவிநேசனுக்கும் அந்த விருது கிடைத்திருக்கிறது. வாழ்த்துக்கள் அய்யா. மேலும் மேலும் நீங்கள் பல விருதுகள் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். விருது வழங்கிய நிர்வாகிகள் அனைவருக்கும், விருது பெறும் மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துகள். – என்னோடு முனைவர் கந்த சுப்பு, சுடலை மணி செல்வன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு