தூத்துக்குடி மாவட்டத்தில் ஓமைக்ரான் கொரோனா தொற்று நோய் 3வது பேரலை வேகமாக பரவி வரும் சூழ்நிலையில், முறப்பநாடு காவல்துறை & வல்லநாடு ஆரம்ப சுகாதார சித்த மருத்துவம் மற்றும் அருள்மிகு ஸ்ரீ தம்பிராட்டி அம்மன், சித்தர் ஶ்ரீ சாது சிதம்பர சுவாமி தன்னார்வலர்குழு & தொண்டர் குலம் இணைந்து, வல்லநாடு கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட 5 – 6 -7 ஆகிய வார்டுகளில் உள்ள 3000க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு வாகனம் மூலம் வீடு வீடாக சென்று கபசுரக் குடிநீர் மற்றும் 1000-முககவசங்களை, முறப்பநாடு காவல் ஆய்வாளர், திரு R.பாஸ்கரன் அவர்கள் தலைமையில், அருள்மிகு ஸ்ரீ தம்பிராட்டி அம்மன், சித்தர் ஶ்ரீ சாது சிதம்பர சுவாமி தன்னார்வலர் குழு ஒருங்கிணைப்பாளர், திரு S.தங்கராஜ் மற்றும் வல்லநாடு பஞ்சாயத்து தலைவர், சந்திரா முருகன் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்கள்.இந்த நிகழ்வில் முறப்பநாடு காவல் உதவி ஆய்வாளர், திரு சுரேஷ்குமார், நேதாஜி யுவக்கேந்திரா தலைவர், ஶ்ரீவை திரு P.மருது பாண்டியன் MA., தங்கம்ஹோட்டல் உரிமையாளர், திரு P.பரமசிவம், திரு A.முத்துவேல், 2017-18 ஆண்டிற்கான சமூக சேவை விருது பெற்றவர், திரு AS.பாலசுந்தர விநாயகம், அமமுக நெல்லை மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர், பசுமை தமிழ் தலைமுறை அமைப்பு கருங்குளம் ஒன்றிய செயலாளர், திரு M.பூல்பாண்டி,
தன்னார்வலர் குழு இளைஞர்கள்:தம்பான், மெர்சல்,மணி,சிதம்பரம்,சின்னதுரை,வினித்,சுடலைமணி,பாலமுருகன்,பாலசங்கர்,மணிகண்டன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்…


