தமிழகத்தில் ஆண்டிற்கு 1.5-மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி நடைபெற்று வருவதாகவும், இதில் 1-லட்சத்து 10-ஆயிரம் டன் ரா சால்ட் தொழிற்சாலைகள் மற்றும் அரசுக்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுக்கப்படுவதாக தமிழ்நாடு உப்பு நிறுவன மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் உப்பு உற்பத்தியாளர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு உப்பு நிறுவன மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன் கலந்து உப்பு உற்பத்தியாளர்கள் தொழில் மேம்பாட்டு குறித்து பேசினார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள உப்பு உற்பத்தியாளர்கள் கலந்துகொண்டு உப்பு உற்பத்தியில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து தெரிவித்தனர். அப்போது அயோடின் உப்பு மட்டுமே தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் பொதுமக்கள் அயோடின் இல்லாத உப்பு கேட்கின்றனர் ஆகையினால் அயோடின் கலக்காத உப்பு விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என உற்பத்தியாளர் கேட்டுக் கொண்டனர்.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு உப்பு நிறுவன மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது தமிழ்நாட்டில் 50-ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தியானது நடைபெற்று வருகின்றது மொத்தம் 4-ஆயிரம் உப்பு உற்பத்தியாளர்கள் உள்ளனர் உப்பு உற்பத்தியாளர்கள் சார்பில் ஒரு கமிட்டி குழு அமைக்கப்பட்டுள்ளது இந்த கமிட்டி குழுவானது தமிழ்நாடு முழுவதும் உப்பு உற்பத்தி நடைபெறும் இடங்களுக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொள்ள உள்ளது இந்த கள ஆய்வின் மூலம் உப்பு உற்பத்தியாளர்களுக்கு லேண்ட்,லைசன்ஸ் போன்ற தெரியப்படும் பிரச்சனைகளுக்கு ஆலோசனை வழங்கப்படுவதோடு உடனடியாக அரசுக்கு தெரிவித்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்க ஏற்பாடுகள் செய்யப்படும்.
தமிழ்நாட்டில் ஆண்டிற்கு 1.5-மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகின்றது இதில் 1-லட்சத்து 10-ஆயிரம் டன் ரா சால்ட் தொழிற்சாலைகள் மற்றும் அரசுக்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுக்கப்பட்டு வருவதாகவும் உப்பு தயாரிப்பில் மிஷின்கள் பயன்படுத்துவதன் மூலம் அதை நம்பி உள்ள தொழிலாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை என்றும் தமிழ்நாடு உப்பு இலாகா இயக்குனர் மகேஸ்வரன் தெரிவித்தார்.


