செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்தில் ஆலோசனை குழு உறுப்பினர் கூட்டம் நடந்தது. ஸ்டேசன் மாஸ்டர் சித்திரை புத்திரன் தலைமை வகித்தார். வணிக ஆய்வாளர் அரவிந்த் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் உறுப்பினர்கள் நம்பித்துரை, கேசவன், ஆண்டாள், ஆறுமுகம் ஆகியோர் கலந்துகொண்டனர். செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை உயர்த்த வேண்டும். இரண்டாவது பிளாட் பார்மில் மின் விளக்கு வசதி செய்ய வேண்டும், மூன்றாவது பிளாட்பார்மில் ரயில் நின்று செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல பிரச்சனைகள் குறித்து பேசினர். பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் செய்துங்கநல்லூரில் நின்று செல்ல வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். இந்த தீர்மான நகலை தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து மத்திய அமைச்சர் எல். முருகனிடம் வழங்கினர். அதை ப்பெற்றுக்கொண்ட அவர் ஆவண செய்வதாக வாக்களித்தார்.


