செய்துங்கநல்லூரில் ஒண்டி வீரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதற்காக அவரது புகைப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆதி தமிழர் பேரவை கருங்குளம் ஒள்றிய செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். அம்மா பேரரவை செயலாளர் ஐயப்பன் முன்னிலை வகித்தார். அதிமுக கருங்குளம் ஒள்றிய செயலாளர் பரமசிவன் ஒண்டிவீரன் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் கதிரேசன், கருப்பசாமி, சிதம்பரம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


