முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய “தூத்துக்குடி மாவட்ட வரலாறு” நூலை தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் வைத்து வெளியிடப்பட்டது. மாவட்ட ஆட்சி தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் தலைமை வகித்து நூலை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் கௌரவ் குமார், நூலாசிரியர் முத்தாலங்குறிச்சி காமராசு, மேல ஆழ்வார் தோப்பு கிராம உதயம் மேலாளர் வேல்முருகன், தனி அலுவலர் இராமசந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். மாவட்ட ஆட்சி தலைவரிடம் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு அந்தந்த பகுதியில் வாழ்ந்து மறைந்த தியாகிகள் பெயரை அவ்வூரில் உள்ள குளங்களுக்கு வைக்க வேண்டும், தாமிரபரணி ஆற்றினை சுத்தப்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வைத்தார். மாவட்ட ஆட்சி தலைவர் இந்த கோரிக்கைகளை ஏற்று ஆவண செய்வதாக வாக்களித்தார். “தூத்துக்குடி மாவட்ட வரலாறு” ஆங்கிலத்தில் தயாராகி வருகிறது. விரைவில் ஆங்கில நூல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


