தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் காரணமாக நகரின் சில பகுதிகளில் நாளை (21ம் தேதி) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பக்கிள் ஓடை சாலையின் நடுவில் உள்ள மின் கம்பங்களை மாற்றியமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக சிப்காட் உப மின் நிலையத்தில் உள்ள பண்டாரம்பட்டி மின் தொடரில் பணி நடைபெற இருப்பதால் நாளை (21ம் தேதி) வெள்ளிக் கிழமை காலை 9மணி முதல் மாலை 5 மணி வரை அண்ணாநகர் 1வது தெரு முதல் 9-வது தெரு வரை, இராஜகோபால் நகர், T.M.B காலனி, மில்லர் புரம். பால்பாண்டி நகர், மற்றும் ராஜீவ் நகர் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று செயற்பொறியாளர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


