திருச்செந்தூரில் முக்குலத்தோரின் வரலாறு அழிக்கப்படுவதை கண்டித்து தூத்துக்குடியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருச்செந்தூரில் முக்குலத்தோரின் வரலாறு தொடர் அழிப்பு தடுத்து நிறுத்தப்பட வேண்டும். திருச்செந்தூர் பிரகார மண்டபத்திற்கு சின்னப்ப தேவர் பெயரை சூட்ட வேண்டும். தூத்துக்குடியில் மூடப்பட்டிருக்கும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை திறந்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
முன்னதாக தூத்துக்குடி 3வது மைல் பகுதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து நூற்றுக் கணக்கானோர் ஊர்வலமாக சென்று ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் இசக்கி ராஜா, மாநில பொறுப்பாளர் ராஜசேகர், மாநில இளைஞரணி சுந்தர பாண்டியன், செல்வ சக்தி பாண்டியன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கோபால் சங்கர், மாவட்ட அமைப்பு செயலாளர் கருங்குளம் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


