தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதர நிலையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என மாதர் சங்கம் கோரிக்கை வலியுறுத்தியுள்ளது..
தூத்துக்குடியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மாவட்ட தலைவர் கலைச்செல்வி, செயலாளர் பூமயில், மாநகராட்சி கவுன்சிலர் முத்துமாரி, மற்றும் நிர்வாகிகள் அளித்த பேட்டியில் கூறியதாவது “தூத்துக்குடி மாநகர், புறநகர், திருச்செந்தூர், கோவில்பட்டி ஒன்றியம், உடன்குடி, ஸ்ரீவைகுண்டம், கருங்குளம், ஒட்டப்பிடாரம் ஆகிய 11 இடங்களில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார மையம், மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆரம்ப சுகாதார மையங்களில் சிடி எஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் வெளியில் எடுக்கப்படுகிறது. ஒவ்வொன்றிக்கு குறைந்தது ரூ.1000 செலவாகிறது. பிறந்த குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் உடனடியாக கிடைப்பதில்லை. போதுமான ஊழியர்கள் இல்லை. மருத்துவமனைக்கு சென்று வர பஸ் வசதி இல்லை. பிரசவ நேரத்தில் மின்சாரம் தடைப்பட்டால் ஜெனரேட்டர் வசதி இல்லை. 108 ஆம்புலன்ஸ் வசதி இல்லை. வீல்சேர் வசதி இல்லை.
அரசு திட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் மகப்பேறு உதவி கிடைப்பதில்லை. செவிலியர்களுக்கு தனியான ஒய்வு அறை இல்லை. அரசு மருத்துவமனைகளில் சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் வசதியில்லை. அவசரகால சிகிச்சை, சிறுநீரகம் போன்ற சிறப்பு மருத்துவமனை பிரிவுகள் இல்லை. மருத்துவமனையில் கதவுகள் பாதுகாப்பனதாக இல்லை. மருத்துவர்களுக்கும், நோயாளிகளுக்கும் பாதுகாப்பு இல்லை. இதுபோன்ற பிரச்சனைகளை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.


