தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் எஸ்.பி., பாலாஜி சரவணன் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி புதன்கிழமையான இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் குறைதீரக்கும் மனு கூட்டம் நடைபெற்றது.
இதில், மனு கொடுக்க வந்த 50 மனுதாரர்கள் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


