
தூத்துக்குடியில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் 4 தியேட்டர்களில் வெளியாவது குறித்து ரசிகர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது
நடிகர் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் வருகிற நவம்பர் 4ஆம் தேதி தியேட்டர்களின் ரிலீஸ் ஆகிறது. தூத்துக்குடியில் பெரீசன் பிளாசா, கிளியோபட்ரா, கேஎஸ்பிஎஸ் கணபதி திரையரங்கம், பாலகிருஷ்ணா ஆகிய 4 திரையரங்களில் படம் வெளியாகிறது. தூத்துக்குடி மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில் ரசிகர் காட்சி அதிகாலை 4 மணிக்கு திரையிடப்படுகிறது. இது தொடர்பாக ரசிகர்களின் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள கனி ஹோட்டலில் நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் தேவக்கனி தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் திருவாசகம், பெரிய சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முன்னாள் தகவல் தொழில்நுட்ப செயலாளர் விஜய் ஆனந்த் சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் முன்னாள் நிர்வாகிகள் வழக்கறிஞர் செந்தில் ஆறுமுகம், லட்சுமணன், ஜெயபால், இதயம் ராமசாமி, மாரிமுத்து, கண்ணன், ராமமூர்த்தி, ரமேஷ், கார்த்திகேயன், விஜய், சாம்சங், ஜோசப், முருகானந்தம், முத்து காமாட்சி மாசாணம் உள்பட தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இருந்து ரஜினி ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.