தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. 14 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மேலும் 12 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 56 ஆயிரத்து 125 ஆக உள்ளது. 14 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் இதுவரை கரோனாவில் இருந்து 55 ஆயிரத்து 546 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 171 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 408 ஆக உள்ளது.