தேவாலயங்களில் திருவிழா திருப்பலி கொண்டாட அனுமதி இல்லை : ஆயர் ஸ்டீபன் அறிவிப்பு
தேவாலயத்தில் அக்.31 வரை வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் திருப்பலி, திருவிழாக்கள் கொண்டாட அனுமதியில்லை என தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆயர் வெளியிட்ட செய்திக்குறிப்பு : தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றின் 3-வது அலையின் தாக்கம் அதிகமாக இருப்பதால், அதன் பரவலைத் தடுக்கும் விதமாக, தமிழக அரசு மற்றும் நமது மாவட்ட ஆட்சியரின் ஆணையின்படி, அக்டோபர் 31 வரை வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் திருப்பலி கொண்டாட்டத்திற்கும் மற்றும் திருவிழாக்கள் கொண்டாடவும் அனுமதியில்லை. மற்ற நாட்களில் குறைந்த எண்ணிக்கையில் அரசாங்க விதிமுறைகளைக் கடைப்பிடித்து வழிபாடுகளை நடத்த அன்போடு வேண்டுகிறேன்” என ஆயர் ஸ்டீபன் அறிவித்துள்ளார்.


