தூத்துக்குடியில் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா நடைபெற்றது.
தமிழக அரசின் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, எம்பவர் இந்தியா – நுகர்வோர் கல்வி ஆராய்ச்சி நடுவம் மற்றும் ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி சார்பில் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா நடைபெற்றது.
ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் மு. குருச்சந்திரன் சிறப்பு விருந்தினராக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எம்பவர் இந்தியா செயல் இயக்குநர் ஆ. சங்கர் மற்றும் மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் இரா. சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில் அனைத்துத் துறை அலுவலர்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளின் பிரதிநிதிகள், கல்லூரி நிர்வாகத்தினர், பேராசிரியைகள் மற்றும் பள்ளி, கல்லூரி குடிமக்கள் நுகர்வோர் மன்ற உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.


