தூத்துக்குடியில் 2 நாட்களுக்கு பின்னர் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
தூத்துக்குடி கடற்பகுதியில் சூறாவளிக் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து கடந்த 2 நாட்களாக தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இந்நிலையில் வானிலை சீரடைந்துள்ள நிலையில் 2 நாட்களுக்கு பின்னர் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இன்று காலை 193 படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.


