பாளையங்கோட்டையில் தேசிய சிந்தனைப் பேரரவை நடத்தும் நெல்லை படைப்பாளர்கள் சங்கமம் பாலபாக்யா ஹாலில் நடந்தது. தேசிய நல்லாசிரியர் முனைவர் சு. செல்லப்பா தலைமை வகித்தார். சமூக சேவகர் வெங்கட்டராமன் முன்னிலை வகித்தார். தேசிய சிந்தனைப் பேரவையின் தென் தமிழக அமைப்பாளர் வெங்கடாசலபதி வரவேற்றார். பிரக்ஞா பிரவாஹ் தென் பாரத அமைப்பாளர் விஸ்வநாதன், மூத்த பத்திரிக்கையாளர் செங்கோட்டை ஸ்ரீராம், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் வாழத்துரை வழங்கினர். கவிஞர் லெட்சுமி மணி வண்ணன் சிறப்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சி நாதனின் வாரிசுகள் ஹரிஹர சுப்பிரமணியன்,ஹரி வாஞ்சி கோபால கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். தேசிய சிந்தனைப்பேரவை தமிழக அமைப்பாளர் முரளி அறிமுக உரை நிகழ்த்தினார். தேசிய சிந்தனைப் பேரவையின் நெல்லை மாவட்ட அமைப்பாளர் இசக்கி நன்றி கூறினார்.


