1812 – ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் ஸ்பென்சர் பேர்சிவலைப் படுகொலை செய்த குற்றத்திற்காக ஜோன் பெல்லிங்காம் என்பவனுக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது.
1896 – உருசியப் பேரரசர் இரண்டாம் நிக்கலாசின் முடிசூட்டு விழாக் கொண்டாட்டத்தின் போது “கோதிங்கா” என்ற இடத்தில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 1,389 பேர் இறந்தனர்.
1900 – தொங்கா ஐக்கிய இராச்சியத்தின் பகுதியாக்கப்பட்டது.
1912 – முதலாவது இந்தியத் திரைப்படம் சிறீ பந்தாலிக் மும்பையில் வெளியிடப்பட்டது.
1917 – முதலாம் உலகப் போர்: இராணுவத்துக்கு கட்டாய ஆள் திரட்டு அதிகாரம் அமெரிக்க அரசுத்தலைவருக்கு வழங்கப்பட்டது.
1927 – மிச்சிகனில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பெரும்பாலும் குழந்தைகள் அடங்கிய 45 பேர் கொல்லப்பட்டனர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: மோண்ட்டி கசீனோ சண்டை முடிவுக்கு வந்தது.
1944 – கிரிமியத் தார்த்தார்கள் சோவியத் அரசினால் வெளியேற்றப்பட்டனர்.
1955 – முதலாவது இந்தோசீனப் போர் முடிவுக்கு வந்ததை அடுத்து பொதுமக்கள், போர்வீரர்கள், பிரான்சிய இராணுவத்தினர் அடங்கிய 310,000 பேர் கம்யூனிச வடக்கு வியட்நாமில் இருந்து தென் வியட்நாமிற்கு இடம் பெயர்ந்தனர்.
1969 – அப்பல்லோ 10 விண்ணுக்கு ஏவப்பட்டது.
1973 – சோவியத் ஒன்றியத்தின் ஏரோபுளொட் வானூர்தி 109 வான்வெளியில் கடத்தப்பட்டு, கடத்தல்காரரின் குண்டு வெடித்ததில், அதில் பயணம் செய்த அனைத்து 82 பேரும் கொல்லப்பட்டனர்.
1974 – அணுகுண்டு சோதனை: சிரிக்கும் புத்தர் என்ற பெயரிடப்பட்ட திட்டத்தில் இந்தியா தனது முதலாவது அணுக்குண்டை வெற்றிகரமாக சோதித்தது.
1980 – வாசிங்டனில் புனித எலன்சு மலை தீக்கக்கியதில் 57 பேர் உயிரிழந்தனர். 3 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான சேதம் ஏற்பட்டது.
1984 – அன்னலிங்கம் பகீரதன் சயனைடு அருந்தி உயிர் நீத்த முதலாவது விடுதலைப் புலிப் போராளி என்ற பெருமையைப் பெற்றார்.
1991 – வடக்கு சோமாலியா சோமாலிலாந்து என்ற பெயரில் மீதமான சோமாலியாவில் இருந்து விடுதலையை அறிவித்தது. ஆனாலும், எந்தவொரு நாடும் இதனை அங்கீகரிக்கவில்லை.
1994 – இசுரேலியப் படைகள் காசாக்கரையில் இருந்து முற்றாக விலகியது. பாலத்தீனர்கள் ஆளும் உரிமையைப் பெற்றனர்.
2005 – ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி மூலம் அனுப்பப்பட்ட படிமம் புளூட்டோ நிக்சு, ஐதரா என்ற மேலதிகமாக இரண்டு நிலாக்களைக் கொண்டிருப்பது உறுதிப்படுத்தியது.
2006 – நேபாளம் மதசார்பற்ற நாடாகவும் அதன் மன்னர் ஒரு சம்பிரதாய மன்னராகவே இருப்பாரெனவும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது.
2009 – 26 ஆண்டுகள் நீடித்த ஈழப்போர் முடிவுக்கு வந்ததாக இலங்கை அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இலங்கையும் அதன் நட்பு நாடுகளும் ஒருசேர 53,000 இற்கும் மேற்பட்ட பூர்வகுடி தமிழ் மக்களை கொன்ற நாள் என தமிழர்கள் குற்றம் சாட்டிய நாள்.
2010 – நாடு கடந்த தமிழீழ அரசு நிறுவப்பட்டது.
2015 – கொலம்பியாவில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி 78 பேர் உயிரிழந்தனர்.
2018 – அமெரிக்காவில் டெக்சசு மாநிலத்தில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
2018 – கியூபா தலைநகர் அவானாவில் வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 113 பேரில் 112 பேர் உயிரிழந்தனர்.


