ஐக்கிய நாடுகள் சபை எல்லா வருடமும் மே 12 ஆம் தேதியை சர்வதேச தாவர ஆரோக்கிய தினமாக கொண்டாடுகிறது. ரிலையன்ஸ் அறக்கட்டளையின் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் சர்வதேச தாவர தினத்தின் 2024 ன் கருத்தியலான தாவர ஆரோக்கியம், பாதுகாப்பான வணிகம் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து வலையொளி நேரடி நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முனைவர் லதா, இணைப்பேராசிரியர், வேளாண் அறிவியல் மையம், திருப்பதிசாரம் அவர்கள் விவசாயிகளுடன் கலந்துரையாடி அவர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். முன்னோடி விவசாயியான செண்பகசேகரன் பிள்ளை உட்பட கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களை சார்ந்த விவசாயிகள் பலர் கலந்துகொண்டு இத்தினத்தை சிறப்பித்தனர்.


