சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்பட்டது. காலை 11 மணிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் சின்னத்தாய் தலைமையில் பேராசிரியர்கள், மாணவிகள், அலுவலகப் பணியாளர்கள், சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மதியம் 2 மணிக்கு சமூக நீதி நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் வணிகவியல் துறைப் பேராசிரியர் முனைவர் மெர்ஸி பவுன் மலர் அவர்கள் வரவேற்றார்கள். கல்லூரி முதல்வர் அவர்கள் தலைமையுரையாற்றினார்கள். திமுக ஒன்றிய செயலாளரும் சாத்தான்குளம் கல்விக் கழக தலைவருமானஜோசப் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். வணிகவியல் துறையின் இனண்டாமாண்டு மாணவி சுஜிகலைவாணி சமூக நீதி நாள் குறித்து உரையாற்றினார். தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் உமாபாரதி அவர்கள் சமூக நீதி நாளின் முக்கியத்துவத்தை தனது சிறப்புரையில் எடுத்தார். வணிகவியல் துறைப் பேராசிரியை முனைவர் மீனாட்சி அவர்கள் நன்றியுரையாற்றினார்கள். விழாவில் சாத்தான்குளம் கல்விக் கழக நிறுவஞர் கவிஞர் சுப்ரமணியன் அவர்களும் கல்விக் கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். மேலும் பேராசிரியர்களும் மாணவிகளும் அலுவலகப் பணியாளர்களும் விழாவில் கலந்து கொண்டனர். விழாவின் ஏற்பாடுகளைக் கல்லூரியின் நுண்கலை மன்றத்தினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.


