தூத்துக்குடியில் நான்காம் கேட் பகுதியில் மேம்பாலம் அமைப்பது தொடர்பாக இரயில்வே நிலைய ஆலோசனை குழு உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தூத்துக்குடி இரயில்வே நிலைய ஆலோசனை குழு உறுப்பினர்களுக்கான கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்ட அம்ரித்பாரத் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி இரயில் நிலையத்தில் நடைபெற உள்ள அதிநவீன வசதிகளுடன் கூடிய நவீன மயமாக்கல் பணிகள் குறித்தும்,
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெருக்கடியை கருந்தில் கொண்டு நான்காம் கேட் பகுதியில் மேம்பாலம் அமைப்பது தொடர்பாகவும், நாளை மறுநாள் 19.07.2024 அன்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கொடியசைத்து துவங்கி வைக்க இருக்கும் மேட்டுப்பாளையத்தில் இருந்து பழனி வழியாக தூத்துக்குடி இரயில் நிலையம் வரை வாரம் இருமுறை இயக்கப்படவிருக்கும் புதிய இரயில் சேவைக்கான துவக்க விழா பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவரும் தூத்துக்குடி இரயில் நிலைய ஆலோசனை குழு உறுப்பினருமான திரு ஆர்.சித்ராங்கதன், ஸ்டேசன் மேனேஜர் திரு,ராஜ், இரயில் நிலைய ஆலோசனை குழு உறுப்பினர்களான எஸ்.சிவராமன, வரீ மணி டாக்டர்.கலைச்செல்வன், லதா, கமர்ஷியல் இன்ஸ்பெக்டர் உத்திரமுருகன், டிராபிக் மேனேஜர் செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


