மேட்டுப்பாளையம் – தூத்துக்குடி இடையே வாரம் இருமுறை சிறப்பு ரயில் சேவையை நாளை மறுதினம் 19ம் தேதி மத்திய அமைச்சர் எல். முருகன் மேட்டுப்பாளையத்தில் தொடங்கி வைக்கிறார்.
வர்த்தகம் கொழிக்கும் தூத்துக்குடியில் இருந்து கோவைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கவேண்டும் என்பது பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையாகும். கொரோனா காலத்திற்கு பின்னர் தூத்துக்குடிக்கு செல்லும் சில இணைப்பு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. இந்நிலையில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று தற்போது தெற்கு ரயில்வே தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் வாரம் இருமுறை ரயிலை இயக்க முன்வந்துள்ளது.
இந்த ரயிலானது தூத்துக்குடியில் இருந்து வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 10.50 மணிக்கு புறப்படுகிறது. மதுரைக்கு அதிகாலை 1.15 மணிக்கும், கோவைக்கு காலை 6.18 மணிக்கும், மேட்டுப்பாளையத்திற்கு காலை 7.15 மணிக்கும் போய் சேர்கிறது. மறுமார்க்கமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இரவு 8 மணிக்கு புறப்படும் ரயில், கோவைக்கு 8.45 மணிக் கும், மதுரைக்கு மறுதினம் அதிகாலை 1.20 மணிக்கும், தூத்துக்குடி காலை 4.20 மணிக்கு வந்து சேருகிறது.
இந்த ரயில் கோவில் பட்டி, சாத்தூர், விருதுந கர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத் துகடவு, கோவை ஆகிய இடங்களில் நின்று செல்கிறது. ரயில் பராமரிப்பு பணிகள் தூத்துக்குடியில் நடக்கிறது. 18 பெட்டிகள் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலை நாளை மறுதினம் மத்திய அமைச்சர் எல்.முருகன் மேட்டுப் பாளையத்தில் தொடங்கி வைக்க உள்ளார்.


