தூத்துக்குடி மறைமாவட்டம் தருவைகுளம் பங்கில் அமைந்துள்ள வான்படை தளபதி அதிதூதர் மிக்கேல் ஆலயத்தின் ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
விழாவின் முதல் நாள் கொடியேற்றம் மற்றும் திருப்பலிக்குத் தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மைக்குரு மரிய வளன் தலைமை தாங்கினார். புதியம்புத்தூர் பங்குத்தந்தை சந்தீஸ்டன் முன்னிலை வகித்தார். இலங்கநாதபுரம் பங்குத்தந்தை ஜோசப் இசிதோர் சிறப்பு மறையுரையாற்றினார்.
விழாவில் செப்டம்பர் 26 (சனிக்கிழமை) – 7-ஆம் திருவிழாவை முன்னிட்டு வான்படை தளபதி மிக்கேல் அதிதூதரின் சப்பரப் பவனி நடைபெறுகிறது. செப்டம்பர் 27 (ஞாயிற்றுக்கிழமை) – 8-ஆம் திருவிழாவை முன்னிட்டு இரவில் நற்கருணைப் பவனி நடைபெறவுள்ளது.
செப்டம்பர் 28 (திங்கள்கிழமை) – 9-ஆம் திருவிழா அன்று மாலையில் பெருவிழா சிறப்பு மாலை ஆராதனை முன்னாள் ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் நடைபெறும்.
செப்டம்பர் 29 (செவ்வாய்க்கிழமை) – 10-ஆம் திருவிழா அன்று காலையில் தோடித் திருப்பலியும், அதனைத் தொடர்ந்து பெருவிழா கூட்டுத் திருப்பலியும் பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜீடு பால்ராஜ் தலைமையில் நடைபெறுகின்றன.
பெருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தருவைகுளம் பங்குத்தந்தை மணி அந்தோணி, உதவி பங்குத்தந்தை பிரான்சிஸ் பவுல் மற்றும் அருட்சகோதரிகள், கட்டளைக்காரர்கள், தருவைகுளம் பங்கு இறைமக்கள் சிறப்பாகச் செய்து வருகின்றனர்.


