கோவில் நந்தவனம் என்பது கோவிலின் பசுமை வேலியாக மட்டுமல்லாமல் நம் மண்ணின் தாவரங்களின் களஞ்சியமாகவும் திகழ்கிறது. தாவரங்கள் மட்டுமல்லாது பறவைகள், வண்ணத்துப் பூச்சிகள், ஊர்வன விலங்குகள், சிறிய பாலூட்டிகள் என பல வகையான உயிரினங்களின் உணவு மற்றும் வாழ்விட தேவைகளையும் பூர்த்தி செய்கிறது நந்தவனம். கோவில்கள் ஊருக்குள் இருப்பதால் ஊரின் பசுமையையும் பிரதிபலிப்பதாக நந்தவனம் செயல்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் பல கோவில்களில் நந்தவனம் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக களக்காடு அருள்மிகு சத்தியாவாகீஸ்வரர் கோவில் நந்தவனத்தில் 50க்கும் மேற்பட்ட இயல் தாவரங்கள் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இத்தாவரங்கள் குறித்தும், இத்தாவரத்திற்கும் கோவிலுக்கமான தொடர்புகள் குறித்தும், மேலும் களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோவிலின் வரலாறு குறித்தும் அறிந்து கொள்ள கலந்து கொள்ளுங்கள் ஜுலை 21, ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 7 மணி அளவில் களக்காடு சத்தியவாகீஸ்வாகீஸ்வரர் கோவிலில் நடைபெறும் உயிர்ச் சூழல் பண்பாட்டுத் தேடல் நிகழ்வில். கீழ்கண்ட இணைப்பில் தங்களது வருகையை பதிவு செய்து உறுதி செய்து கொள்ளுங்கள் https://forms.gle/8FAyEFzFKV219DVX6


