தூத்துக்குடி ஆர்.சி.பெத்தானியா பள்ளியில் நடைபெறும் புதிய வாக்காளர் சேர்க்கை முகாமினை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறுகையில், “வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் செய்தல் போன்றவற்றை வாக்காளர்கள் மேற்கொள்வதற்கு வசதியாக இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 23, 24 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் உள்ளவர்கள் மற்றும் 1.1.2025 அன்று 18 வயது பூர்த்தி அடைபவர்கள் (1.1.2007-ந் தேதிக்கு முன்பாக பிறந்தவர்கள் மற்றும் 17 வயது நிரம்பி 18 வயது பூர்த்தி அடையும் நிலையில் உள்ளவர்களும்) படிவம்-6 மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக்கொள்ளலாம். இந்த முகாமின் தகவலை தங்களது குடும்பத்தினர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரியப்படுத்தி பயன்பெற வேண்டும் என்றார். திமுக வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், நிர்வாகிகள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.


