தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் சர்தார் வல்லபாய் படேலின் 149வது பிறந்த நாளை முன்னிட்டு ஓற்றுமைக்கான ஒட்டப்பந்தயம் நடைபெற்றது.
சர்தார் வல்லபாய் படேலின் 149வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தின் சார்பில் மாணவ மாணவிகளுக்கான மினி மாராத்தான் போட்டி ‘ஓற்றுமைக்கான ஓட்டம்’ என்ற பெயரில் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் நடத்தியது. இதில் கல்லூரியிலிருந்து மொத்தம் 80 மாணவர்கள் மற்றும் 100 மாணவிகள் பங்கு பெற்றனர். இப்போட்டியை இக்கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) நீ. நீதிச்செல்வன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மாணவர்களுக்கான 5 கி.மீ ஓட்டப்பந்தயமும் மாணவிகளுக்கான 3 கி.மீ ஓட்டப்பந்தயமும் மீன்வளக்கல்லூரியின் வளாகத்திலேயே நடத்தப்பட்டது. இப்போட்டியில் மாணவர் பிரிவில் முதல் பரிசு ஞா. ஹர்சன், இரண்டாம் பரிசு செ. கு. மெய்வேந்தன் முன்றாம் பரிசு கொ. தினகரன் மற்றும் கு. உப்பேந்திரன், மாணவியர் பிரிவில் முதல் பரிசு சுவாதி, இரண்டாம் பரிசு பவானி, மற்றும் முன்றாம் பரிசு எழில்மதி ஆகியோர் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் (பொறுப்பு) பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கினார். மேலும் அவர் தமது உரையில், இந்தியாவின் இரும்பு மனிதரான சர்தார் வல்லபாய் படேலின் உழைப்பை நினைவு கூர்ந்தார். ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் மூலமாக நல்லதொரு இந்தியாவை உருவாக்கலாம் என்றும் உரையில் கூறினார். இந்நிகழ்ச்சியில் விளையாட்டு துறைச் செயலாளர் க.செ. விஜய் அமிர்தராஜ் வரவேற்றார். உதவி உடற்கல்வி இயக்குநர் த. நடராஜன் நன்றியுரை ஆற்றினார்.


