தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் ஏரல் காசநோய் பிரிவு இணைந்து நடத்தும்
டிவிஎஸ் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை பணியாளர்களுக்கான காசநோய் விழிப்புணர்வு பயிற்சி
ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள இரட்டை திருப்பதி டிவிஎஸ் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
பயிற்சி முகாமினை டிவிஎஸ் அறக்கட்டளையின் கள இயக்குனர் பாபு துவக்கி வைத்தார்.
மாவட்ட காசநோய் மைய தீர்வு முறை அமைப்பாளர் குப்புசாமி, மாவட்ட அரசு மற்றும் தனியார் துறை ஒருங்கிணைப்பாளர் பா.மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அ.அப்துல் ரஹீம் ஹீரா வரவேற்று பேசினார்.
துணை இயக்குனர் மருத்துவப் பணிகள் (காசநோய்) டாக்டர்.க.சுந்தரலிங்கம் பயிற்சி அளித்து பேசுகையில், ஓய்வு பெற்ற I.A.S., அதிகாரி ஸ்வரன் சிங் முதன்மை நிர்வாக அலுவலராக கொண்டு செயல்படும் டிவிஎஸ் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை கடந்த 2023 ஜனவரி மாதத்திலிருந்து தற்போது வரை தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் தாலுகா, வல்லநாடு காசநோய் பிரிவு, கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், சுற்று வட்டார கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளில் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் முகாம்கள் நடத்துவதற்கு சுகாதார துறையுடன் இணைந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
தற்போது அறக்கட்டளை பணியாளர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பயிற்சியும் கொடுத்துள்ளதால் வருங்காலங்களில் நிச்சயமாக காசநோய் இல்லா தூத்துக்குடி மாவட்டம் உருவாகும் என்று கூறினார்.
டி.வி.எஸ்.சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளையின் சமுதாய வளர்ச்சி அலுவலர் ச.பூர்ணிமா நன்றி கூறினார்.
இப்பயிற்சியில் ஏரல் காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் ரா.மலை விக்னேஷ், டி.வி.எஸ்.சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை பணியாளர்கள் மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு, ஏரல் காசநோய் பிரிவு மற்றும் டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை ஆகியோர் இணைந்து செய்திருந்தார்கள்.


