நான் எழுதிய சாத்தன் வரலாற்று நாவலுக்கு தினத்தந்தி புத்தக மதிப்புரையில் இன்று விமர்சனம் வந்துள்ளது. இந்த விமர்சனத்தினை படித்த பல வாசகர்கள் புத்தகம் கேட்டு தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்கள். விமர்சனம் செய்த தினத்தந்தி நிர்வாகம் மற்றும் ஆசிரியர் குழுவுக்குமிக்க நன்றி. கீழே அந்த புத்தகத்தினை பற்றி தினத்தந்தியில் எழுதிய விமர்சனம் வெளியிடப்பட்டுள்ளது. நூல் வேண்டுவோர் 8760970002,9442834236 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும்- அன்புடன் முத்தாலங்குறிச்சி காமராசு
தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம் ஊரின் பெயருக்குக் காரணமான சாத்தன் சம்பவன் என்ற மன்னரின் வரலாற்றை ஆதாரமாகக் கொண்டு, இந்த நாவல் எழுதப்பட் டுள்ளது. இந்தப் பகுதியின் மன்னராகத் திகழ்ந்த சாத்தன் சாம்பவன் வாழ்வில் வீரம், காதல், சூழ்ச்சி என்ற பல அம்சங்கள் இடம்பெற்று இருந்தன. அந்த நிகழ்வுகளுடன் சிறிது கற்பனையைக் கலந்து இந்த நாவலை ஆசிரியர் எழுதி இருக்கிறார். பாப்பாத்தி என்ற வேறு இனப் பெண் மீது காதல் கொண்ட மன்னர், அந்தப் பெண்ணை மணம் செய்வதற்கு பல முயற்சிகள் செய்ததும், இவர்களின் திருமணத்தை நடைபெறாமல் தடுப்பதற்காக நடந்த சூழ்ச்சியும், அந்தச் சூழ்ச்சியில் மன்னரும் அவரது காதலியும் மரணத்தைத் தழுவியதும் ஆகிய நிகழ்வுகள், பல்வேறு திருப்பங்களுடன் விறுவிறுப்பாகப் படிக்கும் வகையில் சொல்லப்பட்டு இருக்கின்றன.
(ஆசிரியர்: முத்தாலங்குறிச்சி காமராசு; வெளியீடு: பொன் சொர்ணா பதிப்பகம்;விலை: ரூ.250;
செல்போன்: 94428 34236, 8760970002)


