எட்டயபுரத்தில் கோடைகால நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ திறந்து வைத்தார்
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் ஏற்பாட்டின் பேரில் எட்டையாபுரம் பாரதியார் பேருந்து நிலையத்திற்கு முன்பு அமைக்கப்பட்டு இருந்த நீர் மோர் பந்தலை வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் ராஜு எம்எல்ஏ திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர், தர்பூசணி, ஆரஞ்சு, அண்ணாச்சி பழம் ஆகிய பழவகைகளை பொது மக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அதிமுக நகர ஒன்றிய கழக பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனா்.


