தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் காவல்துறையினர் ரோந்து மேற்கொண்டதில் நேற்று சட்டவிரோதமாக கஞ்சா, புகையிலைப் பொருட்கள் மற்றும் மதுபாட்டில்கள் விற்பனை செய்தவர்கள் என 31 பேர் கைது – 73 புகையிலை பாக்கெட்டுகள், 691 மதுபாட்டில்கள் மற்றும் ஒரு ஆட்டோ பறிமுதல்.*
*மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவின்பேரில் அனைத்து உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசார் நேற்று (13.01.2022) மேற்கொண்ட ரோந்துப் பணியில் தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, புகையிலைப் பொருட்கள் மற்றும் மதுபாட்டில்கள் விற்பனை செய்தவர்கள் என தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 3 வழக்குகளும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் ஒரு வழக்கும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் ஒரு வழக்கும், மணியாச்சி உட்கோட்டத்தில் 8 வழக்குகளும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 3 வழக்குகளும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 4 வழக்குகளும், சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 4 வழக்குகளும், மதுவிலக்கு காவல் நிலையங்களில் 5 வழக்குகளும் ஆக மொத்தம் 29 வழக்குகள் பதிவு செய்து 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.*
*♻️இதில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த ஒருவரும், மதுபாட்டில்கள் விற்பனை செய்த 24 பேரும், புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 6 பேரும் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 73 புகையிலைப் பாக்கெட்டுகள், 691 மதுபாட்டில்கள் மற்றும் ஒரு ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.*
*இதுகுறித்து சம்பந்தப்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


