அனுமதியின்றி மின்சாரம் பயன்படுத்திய அமுதுண்ணாக்குடி தசரா குழுவுக்கு அபராதம்
தூத்துக்குடி மாவட்டத்தில் தசரா குழுவினர் சட்டவிரோதமாகவும் அனுமதி பெறாமலும் மின்சாரத்தைப் பயன்படுத்துவதாக மின்வாரிய துறையினருக்குப் புகார் வந்தது. இதையடுத்து மாவட்டத்தில் மின்வாரியத் துறை மூலம் இதனைக் கண்காணிக்க 3 தனிப்படைகள் அமைத்து சோதனை நடத்தி வருகின்றனர். இதனையொட்டி சாத்தான்குளம் அருகே உள்ள அமுதுண்ணாக்குடி பகுதியில் சென்றபோது அங்கு உள்ள தசரா குழுவினர் அனுமதி பெறாமல் மின்சாரத்தைப் பயன்படுத்தியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அமுதுண்ணாக்குடி தசரா குழுவினர் 12,500 அபராதம் விதித்தது .இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அபராத தொகையைக் கட்ட மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சாத்தான்குளம் மின்வாரிய உதவிப் பொறியாளர் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார் புகாரின் பேரில் காவல்துறை விசாரித்து வருகின்றனர்.