தூத்துக்குடி அருகே பைக் மீது லோடு ஆட்டோ மோதியதில் மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
தூத்துக்குடி, தருவைகுளம், நிகிலோஸ் நகரைச் சேர்ந்தவர் அந்தோணி மகன் அந்தோணி மைக்கேல் மரியான் (52). இவரது நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த மைக்கல் மகன் அன்பழகன் (55). இருவரும் நண்பர்கள். மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். நேற்று மாலை ஒரே பைக்கில் தூத்துக்குடியிலிருந்து தருவைகுளம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது எதிரே வந்த லோடு ஆட்டோ பைக் மீது மோதியது.
இவ்விபத்தில் அந்தோணி மைக்கேல் மரியான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார். அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தருவைகுளம் காவல்துறை ஆய்வாளர் ராபின்சன் வழக்குப் பதிந்து, லோடு ஆட்டோவை ஓட்டிவந்த மாப்பிள்ளையூரணியைச் சேர்ந்த தினகரன் மகன் சூரியராஜ் (32) என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.