காயல்பட்டினம் நகராட்சிக்கு டிசிடபிள்யூ நிறுவனத்தின் சார்பாக மஞ்சப்பை தானியங்கி இயந்திரங்கள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் நகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் டிசிடபிள்யூ நிறுவனத்தின் சார்பாக தமிழக முதல்வரின் திட்டமான மீண்டும் மஞ்சப்பை திட்டத்திற்காக மஞ்சப்பை தானியங்கி 2 இயந்திரங்கள் வழங்கப்பட்டது. அதில் ஒன்று இன்றைய தினம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
விழாவில் நகரசபை தலைவர் முத்து முகமது, துணைத்தலைவர் சுல்தான், ஆணையர் குமார்சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். டிசிடபிள்யூ நிறுவனத்தின் சார்பாக நிறுவன பொது மேலாளர் கணேஷ், துணைப் பொது மேலாளர் ஓயிட் பீல்ட், மக்கள் தொடர்பு அதிகாரி பிரகாஷ் மற்றும் நியாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும், காயல்பட்டனம் தீவுத்தெருவில் உள்ள நகராட்சி துவக்கப்பள்ளியில் நடைபெற்ற தின விழாவில் டிசிடபிள்யூ நிறுவனத்தின் சார்பாக குடிநீர் சுத்திகரிப்பான் நிறுவப்பட்டது. மேலும், பள்ளிக்குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளித் தலைமை ஆசிரியர் ராஜலெட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


