பயண அனுபவங்களை நூலாக எழுதுவதில் கைதேர்ந்தவர் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு. அவரது சமீபத்திய நூலே இந்த “குவைத்தில் மூன்று நாட்கள்”. சமீபத்தில் குவைத் சென்று வந்த நூலாசிரியர், அங்கு அவருக்கு கிடைத்த அனுபவங்கள், சந்தித்த மனிதர்களை வைத்து இந்த நூலை எழுதியிருக்கிறார். ஏற்கனவே அத்ரிமலை, குற்றால மலை, தோரணமலை போன்ற இடங்களுக்குச் சென்று வந்து, அங்குள்ள வரலாற்று பதிவுகளை சேகரித்து “அத்ரி மலை யாத்திரை” எனும் நூலை எழுதியவர். தற்போது குவைத்தின் வரலாறோடு அங்கு வாழும் மக்களின் வரலாறையும் இந்த நூலில் பேசி இருக்கிறார். தமிழகத்திலிருந்து குவைத் சென்றது முதல் அங்கிருந்து மீண்டும் தாயகம் திரும்பியது வரை என மொத்தம் 25 வகையான பகுதியில் தனது அனுபவங்களை சுவராஸ்மாக சொல்லியிருக்கிறார். பொதுவாக குவைத் வரலாற்றைப் பேசினாலும் தமிழகத்திற்கும் குவைத்துக்கும் இடையே உள்ள நீண்ட நெடிய தொடர்பையே இந்த நூல் பேசுகிறது. ( குவைத்தில் மூன்று நாட்கள், முத்தாலங்குறிச்சி காமராசு, பொன்சொர்ணா விலை ரூ250/- தொடர்ப்புக்கு 8760970002)


