ஐஜென்எக்ஸ் எனப்படும் சுகாதாரம் சம்பந்தப்பட்ட தொடக்க ஹெல்த்கேர் ஸ்டார்ட்அப் நிறுவனம் இந்த வருடம் சாதனை விருதுகளை பெற்றுள்ளது.
இது தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவம் படித்து வரும் இரண்டு மாணாக்கர்களால் நிறுவி நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் பெற்ற விருதுகள் இளம் சுகாதார புதுமை படைப்பாளி எங் ஹெலத் இன்னோவேட்டர் மற்றும் இந்த வருட முதன்மை சுகாதார தொடக்க நிறுவனம் ஹெலத்கேர் ஸ்டார்ட்அப் ஆப் த இயர் என்பன ஆகும்.
இந்த விருதுகளை வழங்கிய நிறுவனம் உலக தொழில் மாநாடு ஆகும். இந்த நிறுவனத்தின் தென் இந்திய பதிப்பு 2025 ல் விருதுகள் வழங்கப்பட்டன. ஜூன் 25, மற்றும் 26 தேதிகளில் ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடந்த போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல தொழில் சார்ந்த தொழில் முனைவோர் கலந்து கொண்ட போட்டியின் முடிவில் இந்த வெற்றி பெற்றனர்.
இந்த பெரிய நிகழ்வுக்கு தமிழக சிறுகுறு தொழில்கள் அமைச்சர் அன்பரசன் தலைமை வகித்தார். புகழ் பெற்ற தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஜோன்ட்டி ரோட்ஸ் விருதுகளை வழங்கினார்.


