–
1. விடுதலைப் போராட்டத்தில் கட்டபொம்மனுக்கு உதவியும், ஊமைத்துறைக்கு ஆயுதமும் வழங்கியவரும் தனக்குச் சொந்தமான பாண்டியன் தீவை (முயல் தீவு) இந்திய அரசுக்குத் தானமாகவும் வழங்கிய பரதவர் குல மன்னர் சி.சி.தொன் கபிரியேல் தெக்குரூஸ் வாஸ் கோமஸ் பரதவர்ம பாண்டியர் வாழ்ந்த கடற்கரைச்சாலைக்குப் “பாண்டியாபதி சாலை ” எனப் பெயரிட வேண்டுகிறோம்.
2.இராவ்பகதூர் குரூஸ் பர்னாந்துக்கு மணிமண்டபம் கட்ட அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி.
3.மணிமண்டபத்தை குரூஸ் பர்னாந்து சிலை இருக்கும் அதே இடத்தில் கட்டி,
அச்சாலைக்குக் “குரூஸ் பர்னாந்து சாலை ” எனப் பெயரிடவும், புதிய மாநகராட்சி கட்டடத்திற்கு அவர் பெயரைச் சூட்ட வேண்டுமெனவும் வேண்டுகிறோம்.
4. மாண்புமிகு லூர்த்தம்மாள் சைமன் அவர்களுக்கு மணி மண்டபம் கட்டவேண்டும்.
5. சென்னை லேடி வெலிங்டன் கல்லூரி சிந்தனைச் சிற்பி சிங்கார வேலருக்குச் சொந்தமானது. அந்தக் கல்லூரி வளாகத்திற்கு சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் வளாகம் எனப் பெயரிட வேண்டும்.
6. வார்த்தைச் சித்தர் வலம்புரியாரின் நூல்கள் நாட்டுடமையாக்க வேண்டும்.
7.மீனவர் பாதுகாப்புச் சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டுகிறோம்.
8. மீனவர்கள் அரசியல் அதிகாரம் பெறும் வகையில் மண்டல் குழு பரிந்துரைப்படி மீனவர் தனித் தொகுதி (தூத்துக்குடியில் கிழக்கு தொகுதி உருவாக்கல்) உருவாக்க வேண்டுகிறோம்.
9. தூத்துக்குடி மாநகராட்சியில் மீனவர் பகுதியில் வாக்காளர்கள் அதிகமாகவும், பிற பகுதிகளில் பாதியாகவும் வைத்து வார்டுகள் பிரிக்கப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறோம். சமத்துவம், சமூக நீதி அடிப்படையில் அனைத்து வார்டு வாக்காளர்களின் எண்ணிக்கையும் சம அளவில் வைத்து புதிய வார்டுகளை உருவாக்கி, மீனவப் பகுதிகளைக் கிழக்கு மண்டலமாக மாற்ற வேண்டுகிறோம்.
10. அனைத்து கடற்கரை கிராமங்களையும் தனித்தனி கிராமப் பஞ்சாயத்தாக மாற்றி அமைக்க வேண்டுகிறோம்.
11.அறுபது வயதுக்கு மேற்பட்ட மீனவர்களுக்கு மீனவர் நலவாரியம் மூலமாக ஓய்வூதியம் வழங்கிடுக.


