பனமா நாடு தற்போது நமது முத்தாலங்குறிச்சி காமராசு டாட் காமில் 133 வது நாடாக இணைந்துள்ளது. புதிதாக வந்துள்ள அந்த நாட்டில் வசிக்கும் தமிழரைவரவேற்போம். பனமா நாட்டை பற்றியும் பனமா கால்வாயை பற்றியும் அறியலாம். அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு
பனாமா மத்திய அமெரிக்காவின் தென்முனையில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். தரை வழியாக வட அமெரிக்காவையும் தென் அமெரிக்காவையும் இணைக்கும் கடைசி மத்திய அமெரிக்க நாடு இதுவாகும். இந்நாட்டின் மேற்கில் கோஸ்டா ரிகாவும், வடக்கில் அட்லாண்டிக் பெருங்கடலும், தெற்கில் பசிபிக் பெருங்கடலும், தென்கிழக்கில் கொலம்பியாவும் அமைந்துள்ளன.
தலைநகரம்: பனாமா நகரம்
நாணயங்கள்: அமெரிக்க டாலர், பனாமானியன் பால்போவா
ஆட்சி மொழி: எசுப்பானியம்
பனாமா கால்வாய் ஏன் முக்கியமானது? பனாமா கால்வாய் கட்டப்படுவதற்கு முன்பு, அமெரிக்கக் கண்டங்களின் கிழக்கு மற்றும் மேற்குக் கடற்கரைகளுக்கு இடையே பயணிக்கும் கப்பல்கள் தென் அமெரிக்காவின்கேப் ஹார்னைச் சுற்றிச் செல்ல வேண்டியிருந்தது, இது சுமார் 8,000 கடல் மைல்கள் நீளமானது, பின்னர் கால்வாய் வழியாகச் செல்ல இரண்டு மாதங்கள் ஆகும்.