ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்
இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். 1922-ம் ஆண்டு ஒரு சிறிய திருச்சபையாக உருவாகி தேவனுடைய கிருபையால் இந்த ஆண்டு நூற்றாண்டு விழாவை கொண்டாடுகின்ற கருங்குளம் மேலூர் திருச்சபையாரை உள்ளத்தின் ஆழத்திலிருந்து அன்புடன் வாழ்த்துகிறேன்.
கிறிஸ்து ஆலயம் என்ற பெயரைக் கொண்டுள்ள இவ்வாலயத்தில் ஆண்டவரை ஆராதித்து வருகின்ற திருச்சபை மக்களே! நீங்களும் உங்கள் வாழ்க்கையிலும் வார்த்தையிலும் இயேசு கிறிஸ்துவைப் போல வாழ்ந்து காட்டுங்கள். நான் உலகிற்கு ஒளியாயிருக்கிறேன் என்ற இயேசுவின் வார்த்தையைப் போல விசுவாசத்திலும் அன்பிலும் நிலைத்திருந்து அநேகரை ஆண்டவரின் வெளிச்சத்தினிடத்திற்கு அழைத்து வாருங்கள்.
நூற்றாண்டு விழாவை கொண்டடுகின்ற நீங்கள் சீக்கிரத்தில் நூறு குடும்பங்கள் உள்ள திருச்சபையாக வளர்ந்து பெருகவும் அதற்காக ஆத்தும அறுவடை பணியில் ஆர்வத்துடன் உழைத்திடவும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன்.
நூறு ஆண்டு கால கருங்குளம் மேலூர் திருச்சபை வரலாற்றில் பல்வேறு கால கட்டங்களில் சபை ஊழியர்களாக ஊழியம் செய்த ஒவ்வொருவருடைய நல்ல சேவைகளை நினைத்து கர்த்தரை துதிக்கிறேன். இப்போழுது சபை ஊழியராக ஊழியம் செய்து வருகின்ற திரு.R.ஜான்லீ ஜோசப் அவர்களையும் சேகர கமிட்டி உறுப்பினர்கள்
அனைவரையும் வாழ்த்துகிறேன். கர்த்தர் தாமே கருங்குளம் மேலூர் திருச்சபை மென்மேலும் வளர்ந்து பெருகிட அனைத்து கிருபைகளையும் தந்து ஆசிர்வதிப்பராக.


