கருங்குளம் மேலூர் கிறிஸ்து ஆலயத்தின் நூற்றாண்டு விழாவிற்க்காக இந்த இதழ் எழதும் ஆசிரியராக சில வரிகள், கர்த்தருக்கு ஸ்தோத்ரம் கர்த்தருடைய கிருபையால் நமது ஆலயத்தின் நூற்றாண்டு வரலாற்றை நினைவுப்படுத்தக் கொள்ளவும் கர்த்தர் நமக்கு செய்த காரியங்களை நினைவு கூறவும் இந்த இதழை எழுதுகிறேன்.
இந்த வாய்ப்பை எனக்கு தந்த கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன். சேகர குருவானவர் REV. S.இம்மானுவேல் அற்புதகுமார் அவர்களுக்கும் சபை மூப்பர்கள். விசுவாசிகள் அனைவருக்கும் நன்றி செலுத்துகிறேன்.
சுமார் 40 வருடங்களாக இந்த ஆலயத்தில் பல பணிகளில் இணைந்துள்ளேன். சிறு வயதில் இருந்து ஆலய காரியங்களில் மிக கவனம் செலுத்தி வருகிறேன். இந்த ஆலயத்தின் வளர்ச்சியைப் பார்க்கும் பொழுது கர்த்தர் பெரியவர் கர்த்தர் பெரிய காரியங்களை செய்திருக்கிறார் என்பதை அறிந்திருக்கிறேன். ஒரு சிறிய கிராமத்தில் சொற்ப ஜனங்களைக் கொண்டு ஆலயத்தில் நடக்கும் அனைத்தும் ஆச்சரியமே ! இவ்வாலயத்தின் ஆராதனை ஒழுங்கு ஆலய கட்டிடங்களின் வளர்ச்சி எல்லாம் ஆச்சரியமே 1 சுமார் 10 வருடங்களாக இந்த ஆலயத்தைப் பற்றி அறிந்து, விசாரித்து, படித்து, கேட்டு பல விசயங்களை எழுதி இருக்கிறேன். யாவரும் படித்து ஆலயத்தின் வரலாற்றை தெரிந்து கொண்டு தேவனுடைய நாமத்தை மகிமைப் படுத்துங்கள்.
கிறிஸ்துவின் பணியில் R.ஜான்லி ஜோசப் சபை ஊழியர் 9843361774


