தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவியர்ள் ‘ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா மேற்கொண்டனர்.
தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பாக, சுற்றுலா இயக்குநர் அறிவுரையின், பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான ஒரு நாள் வழிப்புணர்வு சுற்றுலா நடத்தப்பட்டது. அதன்படி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவுரையின்படி, மாவட்டத்தில் உள்ள அரசு ஆதிதிராவிட பழங்குடியினர் பள்ளிகளில் பயிலும் 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் / அருங்காட்சியகங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்களின் முக்கியத்துவம் மற்றும் வரலாறு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா” நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கப்பட்டது. விழிப்புணர்வு சுற்றுலாவை தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய்சீனிவாசன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இவ்விழிப்புணர்வு சுற்றுலாவிற்கு தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியர்கள் தமிழ்நாட்டின் மிகப்பழமையான நாகரிகத்தைச் சேர்ந்த தொல்லியல் களங்களில் ஒன்றான ஆதிச்சநல்லூர் பகுதிக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
இச்சுற்றுலாவினை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவுரைப்படி மாவட்ட சுற்றுலா அலுவலர் சி.திருவாசன் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் நாணயம் ஆகியோர்கள் செய்திருந்தார்கள். இந்நிகழ்வில், தூத்துக்குடி மாவட்ட சுற்றுலா அலுவலக உதவி சுற்றுலா அலுவலர் ந.நித்தியகல்யாணி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக கண்காணிப்பாளர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


