தூத்துக்குடி கே.சின்னத்துரை அன்கோ ஜவுளிக் கடையில் ஆடி மாதச் சிறப்புத் தள்ளுபடி விற்பனை கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தென் தமிழகத்தில் பிரபலமான கே.சின்னத்துரை அன்கோ ஜவுளிக் கடை தூத்துக்குடி தமிழ்சாலையில் இயங்கி வருகிறது. இங்கு ஆடி மாதச் சிறப்புத் தள்ளுபடி விற்பனை கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், காஞ்சிபுரம் பட்டுச் சேலைகளுக்கு 50 சதவீதம் வரை அதிரடித் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆர்வத்துடன் பட்டுச் சேலைகளைத் தேர்வு செய்து வாங்கி வருகின்றனர்.
மேலும், 3 புடவைகள் 1,000 ரூபாய், 2 புடவைகள் 499 ரூபாய், 2 சுடிதார் ரகங்கள் 1,000 ரூபாய். மேலும் புடவை ரகங்களுக்கு 50% மற்றும் 30% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. சிறுமிகளுக்கான 2 பிராக்குகள் 599 ரூபாய் மற்றும் 1,188 ரூபாய், 3 டாப்ஸ்கள் 500 ரூபாய் மற்றும் காட்டன் பிராக் 2 வாங்கினால் 1 இலவசம், 3 காட்டன் பிராக்குகள் 1,000 ரூபாய்க்கும் வழங்கப்படுகின்றன.
சிறுவர்களுக்கான 2 பேண்ட் மற்றும் ஷர்ட் ஜோடி 1,188 ரூபாய், 3 டாப்ஸ்கள் 1,000 ரூபாய், 3 ஷர்ட்டுகள் 999 ரூபாய், சிறுவர்களுக்கான 3 டி-ஷர்ட்டுகள் 500 ரூபாய், 3 பேண்ட்டுகள் 1,188 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகிறது. இதனால் குடும்பம் குடும்பமாக ஆடைகளை வாங்குவதற்குக் கடையில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

தூத்துக்குடி மட்டுமின்றி ஏரல், திருச்செந்தூர், திருநெல்வேலி, சென்னை ஆகிய கிளைகளிலும் இந்த ஆடிச் சிறப்புத் தள்ளுபடி விற்பனை மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தரமான பட்டு, ஜவுளி, தங்கம் ஆகியவற்றை ஒரே இடத்தில் மிகக் குறைந்த தள்ளுபடி விலையில் வாங்க முடிகிற காரணத்தால், காலை முதலே கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி ஜவுளிகளை வாங்கி மகிழ்கின்றனர்.


