தூத்துக்குடி நகரின் பல்வேறு பகுதிகளில் நாளை (ஆக.13) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி பீச் ரோடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், நாளை (13.08.2026) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நகரின் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இனிகோ நகர், ரோச் காலனி, சகாயபுரம், மினி சகாயபுரம், மாதா தோட்டம், கடல்சார் மீன்வள ஆராய்ச்சி நிலையம், தெற்கு பீச் ரோடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள உப்பளப் பகுதிகள், லயன்ஸ் டவுன், வடக்கு காட்டன் ரோடு, தெற்கு காட்டன் ரோடு, சுனோஸ் காலனி, செயின்ட் பீட்டர் கோவில் தெரு, தெற்கு எம்பரர் தெரு, ஜார்ஜ் ரோடு, பெரியகடை தெரு, தெற்கு மணல் தெரு
பெரைரா தெரு, விக்டோரியா தெரு, ஜெயலானி தெரு, தெற்கு புது தெரு, அந்தோனியார் கோவில் தெரு, கணேசபுரம், பாத்திமா நகர், இந்திரா நகர், புல்தோட்டம், டெலிபோன் காலனி, தாமஸ் நகர், பனிமய நகர், தாமோதர நகர், வண்ணார் தெரு, பெருமாள் தெரு, சிவந்தாகுளம் ரோடு, சண்முகபுரம் பிராப்பர், சந்தை ரோடு, காந்தி நகர், மேல சண்முகபுரம் 2-வது தெரு முனியசாமிபுரம், CGE காலனி, லெவிஞ்சிபுரம், பக்கிள்புரம், லோகியா நகர், ராஜபாண்டி நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


