செய்துங்கநல்லூர் நெல்லை மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பொருளாளர் அசோக் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் கொம்பையா தலைமை வகித்தார். ஒன்றிய பொருளாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். ஒன்றிய குழு உறுப்பினர் வண்டி மலையான், துணை தலைவர் சுடலை முத்து, ஒன்றிய தலைவர் பாக்கியராஜ் , விவசாய சங்க ஒன்றிய செயலாளர் மணி, விவசாய சங்க ஒன்றிய குழு நடராஜன், அறிவழகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அசோக் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் குற்றவாளிகளை உடனே கைது செய்ய கோரியும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ 50 லட்சம் இழப்பீடு வழங்க கோரியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.