
வல்லநாடு அருகே முந்திரி நிறுவன வேன் மீது இரு பைக்குகள் மோதின. இதில் கருவாட்டுக்கம்பெனி ஊழியர் உல் நசுங்கி பரிதாபமாக இறநதார். அவரது நண்பர் படுகாயமடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே உள்ள வடக்கு காரசேரி இந்திராநகரைச் சேர்ந்தவர் செல்லத்துரை. இவருக்கு பாலமுருகன்(22) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் பாலமுருகன் கொம்புகாரநத்தத்தில் உள்ள ஒரு கருவாட்டு கம்பெனியில் வேலைபார்த்து வந்தார். மகள் கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஊரில் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பாலமுருகன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு பாளை மனகாவலம்பிள்ளைநகரைச் சேர்ந்த நண்பர் முருகாண்டி மகன் அருணாச்சலம்(28) என்பவரையும் அழைத்திருந்தார். இரவு திருமண வீட்டில் சாப்பிட்டு விட்டு நள்ளிரவு 11.30 மணி அளவில் இருவரும் தனித்தனி பைக்கில் புறப்பட்டனர். அப்போது வடக்கு காரசேரிக்கு முந்திரி நிறுவனத்திற்கு இரவு ஷிப்ட் வேலைக்கு செல்பவர்களை ஏற்றுவதற்காக தூத்துக்குடியில் இருந்து வேன் ஒன்று ஊருக்குள் வந்து கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக அந்த வேன் மீது பைக்கில் சென்ற இருவரும் பயங்கரமாக மோதினர். இதில் பாலமுருகன் உடல் நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். நண்பர் அருணாச்சலம் படுகாயமடைந்தார். அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் சேரத்தனர்.
இதுகுறித்து முறப்பநாடு இன்ஸ்பெக்டர் பிரதாபன், எஸ்.ஐ. பரசுலிங்கம் ஆகியோர் விசாரனை நடத்தி முந்திரி நிறுவன வேனை ஓட்டி வந்த அருண்குமார் என்பவரை தேடி வருகின்றனர்.