செய்துங்கநல்லூரில் நூலக கட்டிடம் கட்டி தர ஆவண செய்வதாக கனிமொழி எம்.பி. தகவல் தெரிவித்துள்ளார்.
கருங்குளம் ஒன்றியத்தில் கனிமொழி எம்.பி. நன்றி தெரிவித்தார். அவர் இராமனுஜம்புதூர்& சின்னார்குளம், செய்துங்கநல்லூர் , ஆறாம்பண்ணை, கொங்கராயகுறிச்சி, ஆழ்வார்கற்குளம் ஆகிய பகுதியில் நன்றி தெரிவித்தார். அவர் செய்துங்கநல்லூர் பஜாரில் நன்றி தெரிவித்து பேசினார். அவரை திமுக ஒன்றிய செயலாளர் நல்லமுத்து, பொதுக்குழு உறுப்பினர் கணேசன், விவசாய சங்க தலைவர் குமார், தோணி அப்துல் காதர், பட்டன், முத்துசாமி, பட்டுராஜ், தாமஸ் உள்பட பலர் வரவேற்றனர்.
அவர் பேசும் போது, தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு உள்பட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய பாராளுமன்றத்திற்கு சென்று வந்தவுடன் நடவடிக்கை எடுப்பேன். செய்துங்கநல்லூருக்கு நூலக கட்டிடம் கட்டி தர அனைத்து ஏற்பாடும் செய்யப்படும். விரைவில் நூலகத்தினை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பேன் என்று அவர் கூறினார்.