
தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் ரூ.19.23 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள 23 மருத்துவக் கட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.10.65 கோடி செலவில் 4 புதிய மருத்துவ கட்டடங்கள் மற்றும் 1 காந்த அதிர்வலை வரைவு உபகரணத்தை (MRI SCAN) பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி திறந்து வைத்தார்
தூத்துக்குடி மாவட்டம் அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இன்று (13.05.2025), மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற அரசு விழாவில், தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் ரூ.19.23 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள 23 மருத்துவக் கட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.10.65 கோடி செலவில் 4 புதிய மருத்துவ கட்டடங்கள் மற்றும் 1 காந்த அதிர்வலை வரைவு உபகரணத்தை (MRI SCAN) பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மீன்வளம் – மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் .கனிமொழி கருணாநிதி பேசுகையில் தெரிவித்ததாவது: தமிழகத்தில் ஏழை எளிய மக்களின் நலன் காக்கும் வகையில் பல்வேறு அரசுத் திட்டங்களை செயல்படுத்திவருகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் . குறிப்பாக மருத்துவத்துறையில் பிற மாநிலங்கள் பின்பற்றக்கூடிய வகையில் பல்வேறு முன்மாதிரியான மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்திவரக்கூடிய அரசு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு.
மருத்துவத்துறையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு தேவையான திட்டங்கள் குறித்து வரக்கூடிய கோரிக்கைகளை எல்லாம் அன்போடு பரிசீலித்து அதை உடனடியாக நிறைவேற்றி தரக்கூடிய அமைச்சராக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் செயல்பட்டு வருகிறார்கள். ஒவ்வொரு முறையும் நாம் அழைக்கக்கூடிய நேரத்தில் எல்லாம் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நம் கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றி தரக்கூடிய அமைச்சராக இருக்கக்கூடிய அவருக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அத்தனை மருத்துவமனைகளுக்கும் அத்தனை பகுதிகளுக்கும் சென்று அங்கே நேரடியாக ஆய்வுகளை நடத்தி, அங்கே மருத்துவ சேவைகள், மேம்பாட்டுத்திட்டப்பணிகள் உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த பணிகள் எல்லாம் விரைவாக, சரியாக நடைபெறுகிறதா என்று ஆய்வு செய்துவருகிறார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் உடற்பயிற்சி எவ்வளவு முக்கியம் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கக்கூடியவர் மருத்துவத்துறை அமைச்சர் . பல்வேறு பகுதிகளில் நடைபெறும் மாரத்தான் போட்டிகளில் கலந்துகொண்டு உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்து சிறப்பாக வைத்துக் கொண்டிருக்கக் கூடிய ஒரு அமைச்சர் தான் இந்த மருத்துவத்துறையின் அமைச்சராக இருக்கிறார். தற்போது உள்ள காலகட்டத்தில் மன அழுத்தத்தினால் ஏற்படும் பாதிப்புகளை உடற்பயிற்சியின் மூலமாக எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு அமெரிக்காவுக்கு மருத்துவத்துறை அமைச்சர் அவர்களை அழைத்துள்ளார்கள்.
அதேபோல், நம்முடைய சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் மற்றும் மீன்வளம் – மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அவர்களும் தொடர்ந்து தூத்துக்குடி மக்களுடைய கோரிக்கைகளை பிரதிபலிக்கக் கூடியவர்கள் அதை நிறைவேற்றி தர வேண்டும் என்று சிந்திக்கக்கூடியவர்கள். தங்களுடைய தொகுதிகளில் இருக்கக்கூடிய ஒவ்வொருவரையும் பெயரிட்டு அழைக்கக்கூடிய அளவிற்கு மக்களோடு தங்களை இணைத்துக்கொண்டு மக்கள் பணியாற்றக்கூடிய அமைச்சர்களை நாம் பெற்று இருக்கிறோம்.
தமிழ்நாட்டிலே நம்முடைய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையும், சுகாதாரத்துறையும் செய்திருக்கக்கூடிய சாதனைகளை இதுவரை வேறு எந்த மாநிலமும் எட்டிப் பிடிக்கவில்லை என்பதுதான் உண்மை. மற்ற மாநிலங்களுக்கு சென்று பார்க்கும் பொழுது தமிழ்நாட்டிலே இருக்கக்கூடிய மக்கள் எந்த அளவிற்கு வாய்ப்புகளைப் பெற்றவர்களாக, எந்த அளவிற்கு வளர்ச்சிகளைப் பெற்றவர்களாக இருக்கிறீர்கள் என்று பார்க்கும் பொழுது நிச்சயமாக ஒரு மன நிம்மதி ஒரு மகிழ்ச்சி பிறக்கத்தான் செய்கிறது.
ஏனென்றால் இது திராவிட மாடல் ஆட்சி. மற்ற இடங்களில் எல்லாம் அடிப்படை மருத்துவ சிகிச்சைக்கான வசதிகள் கூட இல்லாமல் மருத்துவர்கள் இல்லாமல் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் அங்கு இருக்கக்கூடிய மக்கள் அவதிப்படக்கூடிய ஒரு நிலையை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் தமிழ்நாட்டில் தனியார் மருத்துவமனையில் கூட இல்லாத அளவிற்கு அதிநவீன ஸ்கேன் வசதிகள் எல்லாம் அரசு மருத்துவமனைகளில் கொண்டுவரப்பட்டுள்ளது. தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் பெட் சிடி ஸ்கேன் வசதி வேண்டுமென்று கோரிக்கை வைத்தேன் அதனை நிச்சயமாக செய்து தருவதாக உறுதி அளித்துள்ளார்கள்.
மக்களின் தேவைகளை உணர்ந்துகொண்டு, தமிழ்நாடு இந்தியாவிலேயே வளர்ந்த நாடுகளோடு ஒப்பிடக்கூடிய இடத்தில் இருக்கக்கூடிய ஒரு மாநிலம் என்று சொல்லக்கூடிய வகையிலே எல்லாத் துறைகளிலும் முன்னேறக் கூடிய முன்னேறி இருக்கக்கூடிய ஒரு மாநிலமாக வேண்டும் என்பதுதான் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடைய கனவு அந்த கனவு தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் நிறைவேறிக் கொண்டிருக்கிறது.
இங்கே கொண்டு வரப்படக்கூடிய திட்டங்கள் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைப் பொறுத்தவரை பெண்களின் நலனில் அதிக அக்கறைக்கொண்டு செயல்படுத்திவருகிறது. அந்த வகையில், பெண்களுக்கு வரக்கூடிய ஒருவிதமான புற்றுநோயிலிருந்து அவர்களை முன்னெச்சரிக்கையாக பாதுகாக்க வேண்டுமென்ற அடிப்படையில் வளர்ந்த நாடுகளில் கூட அந்த தடுப்பூசி செலுத்துவதில்லை ஆனால், தமிழ்நாட்டில் மக்கள் நலனில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டுவரும் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு செயல்படுத்திவருகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் மருத்துவத்துறை, தொழில்துறை உள்ளிட்ட அனைத்து துறைகள் வாயிலாக பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை செயல்படுத்தி, ஒரு சீரான வளர்ச்சி கிடைக்க வேண்டுமென்ற தொலைநோக்கு பார்வையோடு நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கிறது. இந்த உழைப்புதான் இந்த எண்ணம் தான் இந்த விஷன் என்று சொல்லக்கூடியது தான் நம் திராவிட மாடல் ஆட்சி, அந்த ஆட்சியை நமக்கு தந்து கொண்டிருக்கக்கூடிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மீண்டும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில் தெரிவித்ததாவது: தமிழகத்தில் வாழும் ஏழை எளிய மக்கள் எந்தஒரு நிலையிலும் சிரமப்பட்டுவிடக்கூடாது என்று அடிப்படையில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் . குறிப்பாக, மருத்துவத்துறைக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சி வாயிலாக, 10 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் முடிக்கப்பட்ட பணிகள் இப்பொழுது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரம் ஒன்று தற்போது திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு எவ்வளவு பெரிய அவசியமானது என்பதை அனைவருமே நன்றாக அறிவார்கள். தனியார் மருத்துவமனைகளில் சென்று எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று சொன்னால் கிட்டதட்ட 8000 ரூபாய் வரை செலவாகும், அதுவே நம்முடைய அரசு மருத்துவமனைகளில் 2500 ரூபாய் வரையில் அதற்காக செலவாகும். ஆனாலும் நம்முடைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் இன்றைக்கு அதை காப்பீட்டுத் திட்டத்தில் இணைத்து இருக்கிற காரணத்தினால், அரசு மருத்துவமனைகளில் எடுக்க அந்த ஸ்கேனுமே ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் இலவசமாக எடுக்கிற அந்த சூழல் நிலவிக் கொண்டிருக்கிறது.
இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு இப்பொழுது தூத்துக்குடியை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திறந்து வைக்கப்பட்டு இருக்கிற எம்ஆர்எப் போலவே 17 இடங்களில் புதிதாக எம்ஆர்ஐ ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. மருத்துவத் துறையின் வரலாற்றில் நான்கு ஆண்டுகளில் 17 இடங்களில் அதிநவீன வசதிகளுடன்கூடிய இந்த புதிய எம்ஆர்ஐ ஸ்கேன் என்பது மிகப்பெரிய அளவிலான சாதனை.
கிண்டியில் அமைந்திருக்கிற கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை, திருப்பத்தூர் மருத்துவமனை, தென்காசி திருவாரூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர் மற்றும் சென்னை ஓமந்தூரார் சிறப்பு மருத்துவமனை, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, காஞ்சிபுரம் காரப்பேட்டை அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை, சேலம், நீலகிரி, விழுப்புரம், சென்னை பெரியார் நகர் மருத்துவமனை, செங்கல்பட்டு மற்றும் சென்னை கிண்டி முதியோர் நல மருத்துவமனை போன்று 17 இடங்களில் இது போன்ற எம்ஆர்ஐ ஸ்கேன்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.
இப்படியானால் இந்த மருத்துவத்துறையின் ஒரு மிகப்பெரிய புரட்சியாகவே இன்றைக்கு இந்த கருவிகள் இங்கே அமைக்கப்பட்ட திறந்து வைக்கப்பட்டு கொண்டிருக்கிறது. தற்போது தூத்துக்குடியில் ஒன்றை சேர்த்து மொத்தம் 18 இடங்களில் எம்ஆர்ஐ ஸ்கேன்கள் உள்ளது. இன்னமும் கூட தர்மபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது அந்த பணிகள் முடிவுறும் தருவாயில் இருக்கிறது. அங்கேயும் விரைவில் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட இருக்கிறது. ஆக 19 எம்ஆர்ஐ கருவிகள் இந்த நான்கு ஆண்டு காலத்தில் தமிழ்நாட்டில் அமைய பெற்றிருக்கிறது.
ஒவ்வொரு எம்ஆர்ஐ ஸ்கேன் கருவிகளும் 7 கோடி ரூபாய் மதிப்புடையது. மருத்துவத்துறையில் ஒரு மிகப்பெரிய புரட்சி என்கின்ற வகையில் இந்த எம்ஆர்ஐ ஸ்கேன்கள் இன்றைக்கு பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் அதிநவீன மருத்துவக் கருவிகள் உபயோகத்தில் இருப்பது தமிழ்நாட்டில் தான். ஓமந்தூரார் மருத்துவமனையை நீங்கள் அறிவீர்கள்.
இந்தியாவில் 36 மாநிலங்கள் இருந்தாலும், எந்த மாநில அரசு மருத்துவமனையிலும் ரோபோடிக் கேன்சர் என்று சொல்லப்படுகிற கருவி எங்கேயும் இல்லை. தமிழ்நாட்டின் முதலமைச்சர் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கருவிகளை இந்த மருத்துவமனைகளில் அமைத்திட வேண்டும் என்கின்ற வகையிலும், தனியார் மருத்துவமனைகளை காட்டிலும் கூடுதலான வகையில் மருத்துவ சேவையை அழிக்கிற வகையிலும் பல்வேறு வகையான நடவடிக்கைகளை எடுத்ததன் விளைவில் ஓமந்தூரார் மருத்துவமனையில் ரூபாய் 34.50 கோடி மதிப்பில் ஒரு கேன்சர் ரோபோடிக் கருவி இப்போது பயன்பாட்டில் இருக்கிறது.
இந்தியாவில் வேறு எந்த அரசு மருத்துவமனையிலும் இல்லை. ஒன்றிய அரசு நடத்துகிற எய்ம்ஸ், புதுகையில் இருக்கக்கூடிய சிப்மர் போன்ற மருத்துவமனைகளைத் தவிர்த்து, இந்தியாவில் வேறு எந்த அரசு மருத்துவமனைகளிலும் இல்லை. அதுபோல், தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்களால், முத்தமிழறிஞர் கலைஞர் நினைவாக கட்டப்பட்டிருக்கிற கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துமனையில் ஆட்டோ எம்ஆர்ஐ ஒன்று இருக்கிறது. டபுள் பலூன் எண்டோஸ்கோபி என்கின்ற ஒரு கருவி இருக்கிறது. இந்த இரு கருவிகளும் தமிழ்நாட்டு அரசு மருத்துவமனையில் மட்டும்தான் இருக்கிறது.
இந்த கருவிகள் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் அரசு மருத்துவமனைகளில் இல்லாத கருவிகள். ஆட்டோ எம்ஆர்ஐ, டபிள் பலூன் என்ற எண்டோஸ்கோபி போன்ற கருவிகளாக இருந்தாலும், அதேபோல் இன்றைக்கு கேன்சர் ரோபோடிக் கருவிகளாக இருந்தாலும் அரசு மருத்துவமனைகளில் அமையப்பெற்றிருக்கிறது என்றால் தமிழ்நாட்டின் முதலமைச்சர் தமிழ்நாடு மக்களின் மேல் வைத்திருக்கிற அளப்பரிய அந்த ஒரு பாசம், இந்த மக்களைக் காத்திட வேண்டும் என்கின்ற வகையிலான வகையில் எடுத்த நடவடிக்கைகள். அதுபோன்று, இன்றைக்கு புற்றுநோய் பாதிப்புகள் உலகம் முழுவதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற ஒன்று. இந்த அரசு அமைவதற்கு முன்னாள் புற்றுநோயை துல்லியமாகக் கண்டறியப்படுகிற பெட் சிட் ஸ்கேன்.
அதை பொறுத்தவரை ஏறத்தாழ 14, 15 கோடி ரூபாய் வரை செலவாகும். இந்த பெட் சிட் ஸ்கேன்ஸ் எங்கே எல்லாம் இருந்தது என்றால், இந்த அரசு பொறுப்பேற்கிற வரை இரண்டே இரண்டு இடங்களில் மட்டும் தான் இருந்தது. சென்னையில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, அதேபோல் மதுரையில் உள்ள ராஜாஜி அரசு பொது மருத்துவமனை. ஆனால், இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு பாதிப்புகளை துல்லியமாகக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கக்கூடிய அந்த கருவியை தமிழ்நாட்டில் ஐந்து இடங்களில் அமைத்து இதுவரை திறந்து வைத்திருக்கிறோம்.
இந்த அரசு அமைவதற்கு முன்னாள் இரண்டு இடங்களில் இருந்தது. அமைந்ததற்கு பிறகு ஐந்து இடங்களில் திறந்து வைத்திருக்கிறோம். நெல்லை, காஞ்சிபுரம், கோவை, சேலம் மற்றும் தஞ்சாவூர் ஆகிய ஐந்து இடங்களில் இருக்கிற மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பெட் சிட் என்கின்ற அதே நவீன புற்றுநோயைக் கண்டறிகிற கருவி இப்போது பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது. இந்த நிதிநிலை அறிக்கையில் கூட நம்முடைய அமைச்சர்கள் கீதா ஜீவன் அவர்களுக்கு மரியாதைக்குரிய அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் தெரியும். 118 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது. இந்த 118 அறிவிப்புகளில் ஒன்று. இந்த பெட் சிட் ஸ்கேன் இந்தாண்டு இன்னமும் நான்கு இடங்களில் அமையப்பெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துமனை சைதாப்பேட்டை, திருவள்ளூர், விழுப்புரம் திருச்சி ஆகிய நான்கு இடங்களில் இந்த பெட் சிட் ஸ்கேன் அமையவிருக்கிறது ஆக இந்த அரசு அமைந்ததற்குப் பின்னால் இந்த ஆண்டு இறுதிக்குள் ஒன்பது பெட் சிட் ஸ்கேன்கள் அமையப்படவிருக்கிறது. இந்த அரசு அமைவதற்கு முன்னாள் மருத்துவத்துறையின் வரலாற்றில் அதிகமாக இருந்தது 2. இப்போது 9 அமையப்படவிருக்கிறது. இந்தியாவிலேயே பெட் சிட்டியின் அதிகமான பயன்பாடு என்பது இன்றைக்கு தமிழ்நாட்டில் இருந்து கொண்டிருக்கிறது என்பது மகிழ்ச்சியான ஒன்று.
இதைபோல் தான் டிஜிட்டல் சிடி ஸ்கேனாக இருந்தாலும், டிஜிட்டல் எக்ஸ்ரேவாக இருந்தாலும் அதிநவீன உபகரணங்கள் இன்றைக்கு எல்லா மருத்துவமனைகளுக்கும் இன்றைக்கு படிப்படியாக கொண்டு நிறுவப்பட்டு வருகிறது. மருத்துவத்துறையின் வரலாற்றில் மருத்துவர்கள் பணியிடங்களை முழுமையாக நிரப்பியதோடு மட்டுமில்லாமல் என்கூட நம்முடைய மாவட்ட ஆட்சித் தலைவர் இரண்டு மருத்துவமனைகளை கோடிட்டு அங்கே மருத்துவர்கள் நிரப்ப வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் இருக்கிற 2286 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவர்கள் 100% நிரப்பப்பட்டு இருக்கிறார்கள். வட்டார மருத்துவமனைகளை பொறுத்தவரையில் முதுகலைப் பட்டம் முடித்தவர்களை அந்த வட்டார மருத்துவமனைகளுக்கு அனுப்ப வேண்டும் தாலுகா மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என்று அவர்களிடையே ஒரு வழக்கு இருந்தது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்னால்தான் நீதிமன்றத்தில் அந்த வழக்கு முடிவுற்றிருக்கிறது. இப்பொழுது படிப்படியாக இந்த தாலுகா மருத்துவமனைகளுக்கும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கும் முதுகலைப் பட்டம் படித்த மருத்துவர்களை அனுப்பும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இன்னும் பத்து நாட்களில் எந்த தாலுகா மருத்துவமனைகளிலும் மருத்துவர் பணியிடம் காலியாக இல்லை என்கின்ற நிலை தமிழ்நாட்டில் உருவாக இருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டு இருக்கின்றேன். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் வரை ஏறத்தாழ 3,000க்கும் மேற்பட்ட கட்டடங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது, ஒரு 1500க்கும் மேற்பட்ட கட்டடங்கள் வாடகைக் கட்டடங்களில் இயங்கி வந்தது, ஒரு 2000க்கும் மேற்பட்ட கட்டடங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. இந்த துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களை புதிதாக கட்டுவதற்கு நம்முடைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் நிதிஆதாரத்தை பின்பற்றுத்தந்து, இப்போது படிப்படியாக கட்டிக் கொண்டிருக்கிறோம்.
இந்த நான்கு ஆண்டில் மட்டும் 1474 புதிய கட்டடங்கள் கட்டிமுடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. 1474 என்பது சாதாரணமான விஷயம் அல்ல, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நாங்கள் தினந்தோறும் சென்று கட்டிமுடிக்கப்பட்ட அத்தனை கட்டங்களை தொடர்ச்சியாக கடந்த நான்கு ஆண்டுகளாக திறந்து வைத்து வருகிறோம். அதன்படி, இன்றையதினம் தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் ரூ.19.23 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள 23 மருத்துவக் கட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.10.65 கோடி செலவில் 4 புதிய மருத்துவ கட்டடங்கள் மற்றும் 1 காந்த அதிர்வலை வரைவு உபகரணத்தை (MRI SCAN) பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டும்மல்லாமல், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர், தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளின் மருத்துவ தேவைகளை தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்களிடம் பட்டியல் தந்து அவற்றை இன்றைக்கு படிப்படியாக நிறைவேற்றி ஒரு தன்னிறைவைப் பெறுகிற வகையிலான மருத்துவத்துறை கட்டடங்களை இங்கே அமைத்திருக்கிறார். இப்போது கூட ஒரு மிக நீண்ட பட்டியலை என்னிடத்தில் தந்திருக்கிறார் இந்த பட்டியலில் இருப்பதே செய்ய வேண்டும் என்று சொன்னால் குறைந்தது ஒரு 200 கோடியாவது செலவாகும். அந்த அளவுக்கான பட்டியலை தந்து எல்லா ஆரம்ப சுகாதார நிலையத்தையும் தரம் உயர்த்த வேண்டும். புதிதாக பல்வேறு இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைத்து தரவேண்டும்.
புதிய சுகாதார நிலையங்களுக்கு கட்டடங்களை கட்ட வேண்டும் என்று ஒரு மிக நீண்ட பட்டியலை தந்திருக்கிறார் அவருக்கு நன்றாக தெரியும் கடந்த ஜனவரி மாதம் 4ஆம் தேதி ஒன்றிய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு ஜே பி நந்தா அவர்களை சந்தித்து, ஒரு 50 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுமதி கேட்டிருக்கிறோம், ஒரு நூறு ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்துவதற்கும் தரம் உயர்த்துவதற்குமான அனுமதியைக் கேட்டு இருக்கிறோம். ஒரு 500 துணை சுகாதார நிலையங்கள் புதிதாக அமைப்பதற்கு அனுமதி கேட்டு இருக்கிறோம். உரிய நிதியை நிச்சயம் தருவார் என்று எதிர்பார்த்தும் காத்திருக்கிறோம், கிடைக்கும் பட்சத்தில் நிச்சயமாக தூத்துக்குடிக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பதை இந்தநேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரை நிச்சயமாக செய்யப்பட வேண்டிய ஒரு ஊர் என்பதை நான் நன்றாக அறிவேன். ஒட்டப்பிடாரம் தேர்தலில் இங்கே ஒரு மாத காலம் நான் தங்கி இருந்தேன். இந்த மக்களின் வாழ்வாதாரம் உப்பளங்களில் பணியாற்றுகின்ற ஏழை, எளிய அந்த தொழிலாளர்களின் அவர்களுடைய அந்த உடல்நலத்தை பாதுகாப்பது என்பது மிக மிக புண்ணியமான காரியம். எனவே, தூத்துக்குடிக்கான இந்த மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவதென்பது இந்த அரசின் கடமை. தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவருடைய லட்சியம் என்பதை இங்கே மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.
அதேபோல் மரியாதைக்குரிய சகோதரி கவிஞர் கனிமொழி மருத்துவமனையின் பயன்பாடு மிக சிறப்பாக இருக்கிறது மருத்துவர்களும் செவிலியர்களும் மருத்துவம் சார்ந்த பணியாளர்களும் மிகச் சிறப்பாக பணியாற்றுகிறார்கள் என்றாலும், இங்கே இன்னமும் அந்த பொதுப்பணித்துறையின் சார்பில் மருத்துவத்துறையின் கட்டமைப்பை கொஞ்சம் மேம்படுத்தி தரவேண்டும் என்றெல்லாம் சொல்லி இருக்கிறார்கள் நிச்சயமா அவைகளும் செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். தூத்துக்குடியைப் பொறுத்தவரை இப்போது நான் கட்டிமுடித்த கட்டடங்கள், கட்டவிருக்கிற கட்டடங்களை சொன்னேன். மேலும், பல்வேறு பணிகளும் நடைபெற்று வருகிறது.
இதில், 136 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் இதே தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 இலட்சத்தி 21 ஆயிரத்து 108 சதுர அடி பரப்பில் ஏழு தளங்கள் கொண்ட கட்டடம் கட்டும் பணி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. அதில் 650 படுக்கைகள் கொண்ட மிகப்பிரம்மாண்டமான கட்டடம் தூத்துக்குடிக்கு வரவிருக்கிறது. தூத்துக்குடியின் அடையாளங்களில் ஒன்றாக இந்த மருத்துவமனையைக் கட்டடம் ஒன்று மிக விரைவில் இங்கே அமையவிருக்கிறது.
பணிகள் முடிவுற்றவுடன் தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்களின் திருக்கரங்கலால் திறந்து வைத்து, மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட இருக்கிறது. இப்படி நமது தூத்துக்குடியில் மட்டும் 255 கோடியே 71 இலட்சம் ரூபாய் செலவில் 31 மருத்துவத்துறை சம்பந்தமான கட்டடங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அனேகமாக பெரிய மாவட்டங்களில்கூட இவ்வளவு பணிகள் மருத்துவத்துறைக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது இல்லை.
ஆனால் தூத்துக்குடிக்கு 255 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடைபெற்றுகொண்டிருக்கிற நிலையலும், இன்றைக்கு ஒரு 29 கோடி ரூபாய் செலவிலான மருத்துவத்துறைக்கு தேவையான மருத்துவக் கட்ட்டங்கள் அடிக்கல் நாட்டி, திறந்து வைக்கப்பட்டுள்ளது. நிச்சயம் தூத்துக்குடி தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் அவர்களால் தன்னிறைவு பெறும் நிலையை எட்டிக்கொண்டிருக்கிறது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் ரூ.19.23 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள 23 மருத்துவக் கட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.10.65 கோடி செலவில் 4 புதிய மருத்துவ கட்டடங்கள் மற்றும் 1 காந்த அதிர்வலை வரைவு உபகரணத்தை (MRI SCAN) பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, தமிழ்நாடு முதலமைச்சர் எந்த ஒரு கூட்டத்தில் பேசினாலும் மருத்துவமும் கல்வியும் எனக்கு இரண்டு கண்கள் என்று கூறுவார்கள். அந்தவகையில் அந்த இரண்டு துறைகளுக்கும் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்த வருகிறார்கள். அந்த திட்டங்கள் அனைத்தும் மிகச் சரியாக செயல்பட வேண்டும், மருத்துவத்துறையின் செயல்பாடுகள், சேவைகள் எல்லாம் மக்களை சென்றடைய வேண்டும் என்பதில் நம்முடைய முதலமைச்சர் அதிகம் கவனம் எடுத்து வருகிறார்கள்.
அதேபோல இன்றைக்கு கிட்டத்தட்ட நம்முடைய மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 136 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் 3 இலட்சத்தி 21 ஆயிரத்து 108 சதுர அடி பரப்பில் ஏழு தளங்களுடன் 650 படுக்கைகள் கொண்ட மிகப்பிரம்மாண்டமான மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் உயர் சிகிச்சைகள் எல்லாம் அங்கு வழங்கக்கூடிய வகையில் அந்த மருத்துவ கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
அது பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் போது நமக்கு அருகில் உள்ள மாவட்ட மக்களுக்கும் கூட பயன் தரக்கூடியதாக அந்த மருத்துவமனை செயல்படும் என்பதை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அதுவும் விரைவிலே திறந்து வைக்கப்படும். அதேபோல் நம்முடைய டவுன்ல ஒரு பத்து நகர்நல மையங்கள் திறந்து வைக்கப்பட்டது.
இன்றைக்கு அதில் அம்பேத்கர் நகரில் உள்ள நகர் நல மையத்தையும் திறந்து வைத்துள்ளார்கள். அதுபோல நேற்றைய தினத்தில் நம்முடைய பாராளுமன்ற உறுப்பினர் அவர்களுடன் இணைந்து மருத்துவமனை முழுவதுக்கும் தேவைகள் வசதிகள், உட்கட்டமைப்பு வசதிகள், மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்து அலுவலர்களுடன் முழுமையாக ஆய்வு செய்து, அதற்கான ஏற்பாடுகளை ஏற்பாடுகளை செய்து தந்துள்ளார் நமது தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்.
அதுபோன்று, மருத்துவத்துறை அமைச்சர் தெரிவிக்கையில் நம்முடைய மாவட்டத்திலே அரசு மருத்துவமனையில் தான் இந்த எம்ஆர்ஐ ஸ்கேன் இருக்கிறது என்றார்கள். ஆகையால் ஏழை எளிய மக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம். முதியோர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ள மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் எண்ணத்தில் உதித்த திட்டம். இத்திட்டத்தில் இதுவரை கிட்டத்தட்ட 2.25 கோடி நபர்கள் பயன்பெற்றுள்ளார்கள்.
மக்களை தேடி மருத்துவம் திட்டம் ஒரு சிறந்த திட்டம் என்று ஐ.நா சபையே விருது வழங்கியுள்ளது. இது நம்முடைய முதலமைச்சரின் சாதனையாக, திட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக கூறிக்கொண்டு அதிக மருத்துவ வசதிகள் உள்ள மாநிலம் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில், மீன்வளம் – மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் ரூ.19.23 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள 23 மருத்துவக் கட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.10.65 கோடி செலவில் 4 புதிய மருத்துவ கட்டடங்கள் மற்றும் 1 காந்த அதிர்வலை வரைவு உபகரணத்தை (MRI SCAN) பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தினுடைய முதலமைச்சர் பதவியேற்ற உடன் சொன்னது மருத்துவமும் கல்வியும் என்னுடைய இரு கண்கள் என்று சொன்னார்கள். அந்த வகையில் இன்றைக்கு கல்வியாக இருந்தாலும் சரி, மருத்துவமாக இருந்தாலும் சரி, தமிழகத்தை எவராலும் வெல்ல முடியாது என்ற வகையிலே அதை கிராமப்புற சுகாதாரமாக இருந்தாலும் சரி, சுகாதாரமாக இருந்தாலும் சரி அத்தனையும் இன்றைக்கு சுகாதாரத் துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகின்ற அரசாக தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு விளங்கி வருகின்றது.
குறிப்பாக நம்முடைய சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களை பற்றி சொல்ல வேண்டும் என்று சொன்னால், எப்பொழுதும் சுறுசுறுப்பாக பணியாற்றக்கூடியவர். அந்த வகையில் நன்றாக பணியாற்ற கூடிய சகோதரர் மரியாதைக்குரிய அமைச்சர் அண்ணன் மா.சுப்ரமணியன் . அந்த வகையில் இன்றைக்கு தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கக்கூடிய முதல்வர் பல்வேறு துறைகளின் வாயிலாக பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை செயல்படுத்திவருகிறார்கள்.
அந்த வகையில் தூத்துக்குடிக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் மருத்துவத்துறையில் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்திவருகின்ற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன் என மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.சிவகுமார், 36வது வார்டு மாமன்ற உறுப்பினர் ர.விஜயலட்சுமி, இணை இயக்குநர் மருத்துவ பணிகள் மரு.க.பிரியதர்ஷினி, மாவட்ட சுகாதார அலுவலர்கள் மரு.யாழினி (தூத்துக்குடி), மரு.வித்யா விஸ்வநாதன் (கோவில்பட்டி), அரசு அலுவலர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்