
இராணிமகாராஜபுரத்தில் ரூ.35 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார மையத்தை ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாண சுந்தரம் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி சிறப்பு நிலை பேரூராட்சி இராணி மகாராஜபுரத்தில் ரூ. 35.00 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார மையம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் ஆறுமுகநேரி பேரூராட்சி மன்ற தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி துணை சுகாதார மைய கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் செயல் அலுவலர் உஷா, ஊர் நிர்வாகி தலைவர் டாக்டர் அருள் செந்தேன், செயலாளர் முத்துலிங்க பாண்டியன், 14வது வார்டு கவுன்சிலர் எம் பி சரவணன், நிர்மலா, வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் ஹமிது ஹில்மி, சோனகன் விளை மருத்துவ அலுவலர் டாக்டர் செய்யது அகமது, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தங்க செல்வன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவில் மருத்துவமனைக்கு நிரந்தரமாக ஒரு மருத்துவரை நியமிக்க வேண்டும் என ஊர் மக்கள் சார்பில் கோரிக்கை வைத்தனர்.